ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 Jan 2017 4:00 AM IST (Updated: 20 Jan 2017 1:37 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாகப்பட்டினம்,

இந்த போராட்டத்துக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்பை தடை செய்யக்கோரியும், ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரியும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நாகை மாவட்ட மையம் சார்பில் நாகை கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் அந்துவன்சேரல் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அன்பழகன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் நாகை தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் சிவக்குமார் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் வட்ட செயலாளர் வாசுகி நன்றி கூறினார்.

அதேபோல கீழ்வேளூரிலும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஜல்லிக்கட்டு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பீட்டா அமைப்பை தடை செய்ய வலியுறுத்தி அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், தே.மு.தி.க., அரிமா சங்கம், ரோட்டரி சங்கம், அப்துல்கலாம் நற்பணி மன்றம் ஆகியோர் இணைந்து கொள்ளிடத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story