பெண்ணின் கவனத்தை திசை திருப்பி ரூ.5½ லட்சம், 11½ பவுன் தங்க நகைகள் கொள்ளை
திருச்சியில் காரில் இருந்த பெண்ணின் கவனத்தை திசை திருப்பி ரூ.5½ லட்சம்-11½ பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருச்சி,
ஓய்வு பெற்ற அரசு ஊழியரின் மனைவி
திருச்சி உறையூர் சாலை ரோடு பகுதியை சேர்ந்தவர் ரவி. இவர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி ரேவதி (வயது 54). இவர் நேற்று முன்தினம் மதியம் புத்தூர் அம்மையப்ப நகரில் வசிக்கும் உறவினர் ஒருவரை பார்த்து விட்டு ஸ்ரீரங்கம் சென்று வருவதற்காக தனது காரில் புறப்பட்டார். காரை ரேவதியின் அக்காள் மகனான ஆனந்த் ஓட்டினார். காரின் முன்பக்க இருக்கையில் ரேவதி அமர்ந்திருந்தார். பின்னர் அம்மையப்ப நகரில் உள்ள உறவினரை பார்த்து விட்டு, ஸ்ரீரங்கம் செல்வதற்காக வயலூர் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஒரு பல்பொருள் அங்காடியில் பொருட்கள் வாங்குவதற்காக கோ.அபிஷேகபுரம் கோட்ட அலுவலகம் அருகே காரை ஓரமாக நிறுத்தினர்.
பின்னர் காரை விட்டு இறங்கி ஆனந்த் அங்காடிக்கு சென்று விட்டார். காரில் ரேவதி மட்டும் தனியாக இருந்தார். அப்போது 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் உள்ளிட்ட மர்ம நபர்கள் சிலர் அங்கு வந்து ரேவதி அமர்ந்திருந்த ஓரத்தில் உள்ள காரின் கண்ணாடியை கையால் தட்டினர். பின்னர் அவர்கள் 10 ரூபாய் நோட்டுகளை காரின் அருகே கீழே போட்டனர். கண்ணாடியை தட்டிய சத்தத்தை கேட்ட ரேவதி காரின் கண்ணாடியை திறந்து வெளியே பார்த்தார். அப்போது ஒரு வாலிபர் ரேவதியிடம் காரின் அருகே தரையில் கிடக்கும் பணம் உங்களுடையதா? என்று கேட்டார். இதனை தொடர்ந்து அந்த பணத்தை எடுப்பதற்காக ரேவதி காரை விட்டு இறங்கினார்.
பணம்-நகைகள் கொள்ளை
அப்போது அந்த மர்ம நபர்கள் காரில் இருந்த ரூ.5 லட்சத்து 40 ஆயிரம் மற்றும் தங்க சங்கிலி, மோதிரம், வளையல்கள் உள்ளிட்ட 11½ பவுன் தங்க நகைகள் இருந்த பையை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ரேவதி இது தொடர்பாக திருச்சி அரசு மருத்துவமனை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பணம், நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் நடந்த நேரத்தில் அந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் பார்வையிட்டு வருகின்றனர். ரூபாய் நோட்டை கீழே போட்டு காரில் இருந்த பணம் மற்றும் நகைகளை நூதன முறையில் கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story