7-வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்த கோரிக்கை
புதுவை மாநிலம் வில்லியனூரில் அனைத்து கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களின் பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.
வில்லியனூர்,
கொம்யூன் பஞ்சாயத்து வளாகத்தில் நடந்த கூட்டத்திற்கு சங்க தலைவர் மாறன் தலைமை தாங்கினார். இதில் பஞ்சாயத்து ஊழியர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
புதுவை அரசு, அனைத்து கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கும் 7-வது ஊதியக்குழு பரிந்துரைத்த சலுகைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
தினக்கூலி ஊழியர்கள், பகுதி நேர ஊழியர்களை விரைவில் பணிநிரந்தரம் செய்ய வேண்டும். நிலுவையில் உள்ள போனஸ் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானத்தை அரசுக்கு தெரியப்படுத்தும் வகையில் வருகிற 24-ந்தேதி விடுப்பு விடுத்து போராட்டம் நடத்தப்படும் என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Next Story