மாணவ, மாணவிகள் உண்ணாவிரதம் வெளிநாட்டு குளிர்பானங்களை சாலையில் கொட்டினர்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து மாணவ, மாணவிகள் உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். வெளிநாட்டு குளிர்பானங்களை சாலையில் கொட்டினர்.
காலாப்பட்டு,
மாணவர்கள் உண்ணாவிரதம்
ஜல்லிக்கட்டுக்கு ஆதர வாக புதுவை மாநிலம் காலாப்பட்டு பல்கலைக் கழக மாணவ-மாணவிகள் பல்கலைக்கழக நுழைவு வாயிலில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடிமத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து கோஷமிட்டனர்.
வில்லியனூரை அடுத்த பத்துக்கண்ணு பகுதியில் உள்ள தனியார் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவ- மாணவிகள் 300-க்கும் மேற்பட்டோர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினார்கள். அப்போது அவர்கள் வெளிநாட்டு குளிர்பான பாட்டில்களை சாலையில் கொட்டி எதிர்ப்பை காட்டினர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு புதுவை ரோடியர் மில் மைதானத்தில் நடந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.
விவசாய சங்கம்
நெட்டப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள், பெண்கள் அங்குள்ள சிவன்கோவில் அருகில் நேற்று காலை கூடினார்கள். அப்போது அவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து கோஷமிட்டு போராட்டம் நடத்தினார்கள்.
திருபுவனை டி.எஸ்.பாளையத்தில் உழவர் நம்மாழ்வார் இயற்கை விவசாய சங்கத்தின் சார்பில் போராட்டம் நடத்தினார்கள். இதில் அந்த கிராமத்தை சேர்ந்த பெண்கள், இளைஞர்கள், பள்ளி-கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story