உப்பளத்தில் ஒத்திகை நிகழ்ச்சி: குடியரசு தின அணிவகுப்பில் கர்நாடக போலீசார்
புதுச்சேரியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் கர்நாடக மாநில போலீசாரும் இடம்பெறுகின்றனர்.
புதுச்சேரி,
குடியரசு தின அணிவகுப்பு
இந்திய குடியரசு தினவிழா வருகிற 26-ந்தேதி புதுவை உப்பளம் இந்திராகாந்தி விளை யாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த விழாவில் கவர்னர் கிரண்பெடி கலந்துகொண்டு தேசியக்கொடி ஏற்றி வைக்கிறார்.
விழாவில் போலீசார், காவல்படை அல்லாதோர், என்.சி.சி., என்.எஸ்.எஸ்., பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு இடம்பெறுகிறது. இவர்களின் அணிவகுப்பு மரியாதையை கவர்னர் ஏற்றுக்கொள்ள உள்ளார்.
கர்நாடக போலீசார்
இந்த அணிவகுப்பில் முதல் முறையாக கர்நாடக மாநில போலீசாரும் இடம்பெற உள்ளனர். இதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.
இதற்காக கர்நாடக மாநில போலீசாரும் புதுச்சேரி வந்துள்ளனர். அவர்கள் உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் நேற்று நடந்த குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகையில் கலந்துகொண்டனர். இதேபோல் புதுச்சேரி போலீசாரும் கர்நாடக மாநிலத்தில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் கலந்துகொள்ள உள்ளனர்.

Next Story