தாரை, தப்பட்டையுடன் களைகட்டிய போராட்டம் விடிய விடிய நடந்தது


தாரை, தப்பட்டையுடன் களைகட்டிய போராட்டம் விடிய விடிய நடந்தது
x
தினத்தந்தி 20 Jan 2017 4:15 AM IST (Updated: 20 Jan 2017 2:57 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் மாணவர்களின் போராட்டம் தாரை, தப்பட்டையுடன் களை கட்டியது. தொடர்ந்து 3-வது நாளாக விடிய விடிய போராட்டம் நடந்தது.

புதுச்சேரி,

விடிய விடிய போராட்டம்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக புதுவை ரோடியர் மில் மைதானத்தில் மாணவர்களின் போராட்டம் 3-வது நாளாக விடிய விடிய நடந்தது. தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அவர்களது களைப்பை போக்கும் வகையில் சாகசங்கள் செய்து காட்டியபடியும், தாரை, தப்பட்டைகளை இசைத்தபடியும் போராட்டத்தை தொடர்ந்தனர்.

இரவு, பகலாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவ-மாணவிகளின் பெற்றோரும் அவர்களது குடும்பத்தினரும் இரவு நேரங்களில் கலந்து கொண்டு வருகின்றனர். சிலர் சிறு குழந்தைகளையும் அழைத்து வந்து இருந்தனர். நேற்று இரவிலும் இதேபோல் குடும்பம் குடும்பமாக வந்து கலந்து கொண்டனர். விடிய விடிய இந்த போராட்டம் நடந்தது.

களை கட்டியது

தொடர்ந்து போராடி வரும் மாணவர்கள் உற்சாகத்துடன் போராட்டத்தை தொடரும் வகையில் மாணவர்கள் சிலர் தங்களுக்கு தெரிந்த சாகசங்களை செய்து காட்டி மகிழ்வித்தனர். தப்பாட்ட கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகளும் நடந்தன. இதில் கலைஞர்கள் கலந்து கொண்டு திரைப்பட பாடலுக்கு ஏற்ப தாரை, தப்பட்டைகளை இசைத்து நடனம் ஆடினர். இந்த கலைநிகழ்ச்சிகளை ரசித்தபடி மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் காணப்பட்டனர். சில மாணவர்கள் தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து நடனம் ஆடி மகிழ்ந்தனர். இதனால் போராட்ட களம் தொடர்ந்து களை கட்டியபடி இருந்தது.


Next Story