ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பசுமை தீர்ப்பாயத்தை வக்கீல்கள் புறக்கணிக்கின்றனர்
ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி தமிழகம் முழுவதும் மாணவர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் போராடி வருகின்றனர்.
சென்னை,
ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி தமிழகம் முழுவதும் மாணவர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் போராடி வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு விவசாயிகள், வணிகர்கள், நடிகர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தை 20-ந் தேதி (இன்று) புறக்கணிக்கப்போவதாக அங்கு ஆஜராகும் வக்கீல்கள் சிலர் தெரிவித்துள்ளனர். ஜல்லிக்கட்டு தொடர்பாக நடக்கும் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அந்த தீர்ப்பாயத்தில் இன்று நடக்கும் விசாரணைக்கு ஆஜராக மாட்டோம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

Next Story