பம்பாய் தமிழ் வர்த்தக, தொழில் சபை ஆண்டு விழா பாண்டுப்பில் நடந்தது


பம்பாய் தமிழ் வர்த்தக, தொழில் சபை ஆண்டு விழா பாண்டுப்பில் நடந்தது
x
தினத்தந்தி 20 Jan 2017 3:38 AM IST (Updated: 20 Jan 2017 3:38 AM IST)
t-max-icont-min-icon

பம்பாய் தமிழ் வர்த்தக, தொழில் சபையின் ஆண்டு விழா பாண்டுப்பில் நடந்தது.

மும்பை,

பம்பாய் தமிழ் வர்த்தக, தொழில் சபையின் ஆண்டு விழா பாண்டுப்பில் நடந்தது.

முதலாம் ஆண்டு விழா

பம்பாய் தமிழ் வர்த்தக, தொழில் சபையின் முதலாம் ஆண்டு விழா நேற்று முன்தினம் பாண்டுப் மேற்கில் உள்ள என்.இ.எஸ். ரத்தினம் கல்லூரியில் நடந்தது. விழாவை ஸ்ரீகாஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். விழாவையொட்டி 84 வகையான புதிய தொழில் மற்றும் வணிகத்தில் ஈடுபட உள்ளவர்களுக்கு உதவிகள் செய்யப்பட்டன.

மேலும் தொழில் தொடங்க உள்ளவர்களுக்கு தொழில் வல்லுநர்களை கொண்டு சிறப்பான வணிக ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

விருதுகள்

பின்னர் மாலையில் நடந்த நிறைவு விழாவில், இந்திய தொழில் சபையை சேர்ந்த என்.விஜய் கலந்திரி தலைமை தாங்கினார்.

விழாவில் தொழிலில் சாதித்து வருபவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

விழாவிற்கான ஏற்பாடுகளை பம்பாய் வர்த்தக, தொழில் சபை தலைவர் ஆர்.வரதராஜன், செயலாளர்கள் அங்கப்பன், நாகராஜன், பொருளாளர்கள் சக்தி கண்ணன், பழனி மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் செய்து இருந்தனர்.

Next Story