தாராவியில் நெல்லையை சேர்ந்த பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது
மும்பை தாராவியில் நெல்லையை சேர்ந்த பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மும்பை,

தமிழ் பெண் தற்கொலை
மும்பை, தாராவி கிராஸ்ரோட்டில் உள்ள நவஜீவன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் அந்தோணி(வயது31). இவரது மனைவி சுஜாதா. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் சுஜாதா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்த சாகுநகர் போலீசார் உடலை மீட்டு சயான் ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
கணவர் கைது
இந்தநிலையில் சுஜாதாவின் பெற்றோர் திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லியில் இருந்து மும்பை வந்தனர். அவர்கள், சுஜாதாவை அவரது கணவர் துன்புறுத்தி வந்ததாக சாகுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் பேரில் சுஜாதாவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் அந்தோணி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story