காரை வழிமறித்து தொழில் அதிபரிடம் 7½ பவுன் நகை பறிப்பு; போலீஸ் வலைவீச்சு
கன்னியாகுமரியில் காரை வழிமறித்து தொழில் அதிபரிடம் 7½ பவுன் நகையை பறித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
கன்னியாகுமரி,
தொழில் அதிபர்
மார்த்தாண்டம் அருகே உள்ள செருகோல் பகுதியை சேர்ந்தவர் தர்மஜெயம்(வயது 35). தொழில் அதிபர். இவர் வீடுகள் கட்ட செங்கல், மணல் விற்பனை செய்து வருகிறார். கன்னியாகுமரியில் ஒரு வீட்டுக்கு மணல், செங்கல் வினியோகம் செய்வதற்காக அந்த இடத்தை பார்க்க இவர் நேற்று தனது சொகுசு காரில் கன்னியாகுமரிக்கு வந்தார். காரை அவரே ஓட்டி சென்றார். கார், கன்னியாகுமரி 4 வழிச்சாலை பகுதியில் நேற்று மதியம் சென்று கொண்டிருந்தது.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், காரின் குறுக்கே மோட்டார் சைக்கிளை நிறுத்தி காரை வழிமறித்தனர். பின்னர் தொழில் அதிபரிடம் தகராறு செய்தனர். அப்போது ஒருவன், கத்தியை காட்டி மிரட்டி தொழில் அதிபரின் 7½ பவுன் நகையை பறித்தான். மற்றொருவன் காரின் மீது பெரிய பாறாங்கல்லை தூக்கி போட்டான். இதில் கார் கண்ணாடி நொறுங்கியது. உடனே தொழில் அதிபர், சத்தம்போட்டு அலறினார். இதைக்கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்தனர்.
வலைவீச்சு
அதற்குள் அந்த 2 பேரும், மோட்டார் சைக்கிளில் ஏறி மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர். 2 பேரும் டிப்–டாப்பாக பேண்ட், டிசர்ட் அணிந்து வந்துள்ளனர். தொழில் அதிபர், ஒருவனின் டி சர்ட்டை பிடித்து இழுத்துள்ளார். அப்போது அவனது டி சர்ட்டின் ஒரு பகுதி கிழிந்து தொழில் அதிபர் கையில் சிக்கி உள்ளது.
இந்த சம்பவம் குறித்து கன்னியாகுமரி போலீசில் புகார் செய்யப்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டு வேணுகோபால், இன்ஸ்பெக்டர் சரவணகுமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மோட்டார் சைக்கிளில் தப்பிய 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

Next Story