ஆத்தூர் அருகே கூலமேட்டில் கிராம மக்கள், இளைஞர்கள் எதிர்ப்பால் ஜல்லிக்கட்டு ரத்து
ஆத்தூர் அருகே கூலமேட்டில் கிராமமக்கள், இளைஞர்கள் எதிர்ப்பு
சேலம்,
கூலமேடு கிராமம்
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கூலமேடு கிராமத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி நடத்தப்படும் ஜல்லிக்கட்டு விழாவானது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக தடை காரணமாக இங்கு ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை. தற்போது ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டு வரப்பட்டதால், கூலமேட்டில் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக நேற்று முன்தினம் ஆத்தூர் உதவி கலெக்டர் செல்வன் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
அப்போது, கூலமேடு பெருமாள் கோவில் திடலில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்றும், அதை தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி தொடங்கி வைப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கூலமேட்டில் ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக வாடிவாசல் அமைப்பதற்கான பொருட்கள் கூலமேடு கிராமத்திற்கு நேற்று முன்தினம் இரவில் கொண்டுவரப்பட்டன. 108 ஆம்புலன்ஸ்களும் அங்கு தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
கிராமமக்கள் எதிர்ப்பு
ஆத்தூர் உதவி கலெக்டர் செல்வன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு சென்று ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்ய முயன்றனர். ஆனால் அவசர சட்டம் தேவையில்லை என்றும், நிரந்தர சட்டம் கொண்டு வரும்வரை கூலமேட்டில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க மாட்டோம் எனவும் எதிர்ப்பு தெரிவித்து வாடிவாசல் அமைக்கும் பணியை கிராமமக்களும், இளைஞர்களும் தடுத்து நிறுத்தினர். இதனால் வாடிவாசல் அமைப்பதற்காக கொண்டு வரப்பட்ட பொருட்களை மைதானத்திலேயே போட்டுவிட்டு அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
இந்தநிலையில், எப்படியும் கூலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்திவிட வேண்டும் என்று நினைத்த அதிகாரிகள், இதுபற்றி கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நேற்று காலை சென்றனர். ஆனால், அதிகாரிகளின் சமரச பேச்சுவார்த்தையை கிராமமக்கள் ஏற்க மறுத்து அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு நிலவியது. மேலும், ஆத்தூரில் இருந்து கூலமேடு கிராமத்திற்கு வந்த அரசு பஸ்சை மறித்து இளைஞர்கள் போராட்டம் நடத்தினர்.
ஜல்லிக்கட்டு ரத்து
இதனால் கூலமேட்டில் நடக்க இருந்த ஜல்லிக்கட்டு ரத்து செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே, கூலமேட்டில் ஜல்லிக்கட்டு நடக்கும் மைதானத்தில் கிராம மக்கள், இளைஞர்கள், மாடுபிடி வீரர்கள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரத்திற்கு பின் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதனிடையே, அரியலூரில் இருந்து 2 காளைகளை அதன் உரிமையாளர்கள் ஒரு வேனில் ஏற்றி நேற்று கூலமேடு கிராமத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது, அங்கிருந்த கிராமமக்கள், காளைகள் கொண்டுவர எதிர்ப்பு தெரிவித்து திருப்பி அனுப்பினர். ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதை காண சேலம், ஆத்தூர், நரசிங்கபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான மக்கள் கூலமேட்டிற்கு வந்திருந்தனர். ஆனால், ஜல்லிக்கட்டு நடைபெறாததால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
உருவபொம்மை எரிப்பு
கூலமேடு கிராமத்தை சேர்ந்த ஒரு தரப்பினர், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தடையாக இருக்கும் பீட்டா அமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். அப்போது, ஆத்திரம் அடைந்த சிலர், உருவபொம்மையில் “பீட்டா“ என்று பெயர் எழுதி அதற்கு தீ வைத்து எரித்தனர். பிறகு பெண்கள் ஒப்பாரி வைத்து அழுதார்கள்.

Next Story