போலீஸ் தாக்குதலை கண்டித்து திருச்சியில் கல்லூரி மாணவ- மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்
போலீசார் தாக்குதலை கண்டித்து திருச்சியில் கல்லூரி மாணவ- மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி,
போலீஸ் தடியடி
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் பல இடங்களில் போராட்டம் நடத்திய கல்லூரி மாணவ-மாணவிகளை போலீசார் நேற்று முன்தினம் கலைந்து செல்ல அறிவுறுத்தினர். ஒரு சில இடங்களில் போராட்டத்தை வாபஸ் பெற்று மாணவ-மாணவிகள் திரும்பினர். சென்னை உள்பட சில இடங்களில் கலைந்து செல்ல மறுத்தனர். இதனால் போலீசார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர்.
உள்ளிருப்பு போராட்டம்
இந்த நிலையில் மாணவ-மாணவிகள் மீது தடியடி நடத்திய போலீசாரை கண்டித்தும், தாக்குதல் நடத்திய போலீஸ்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்க கோரியும் திருச்சியில் பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரியில் மாணவ-மாணவிகள் சிலர் நேற்று காலை வகுப்புகளை புறக்கணித்து விட்டு கல்லூரி வளாகத்தின் நுழைவு வாயில் அருகே அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்தனர்.அப்போது கல்லூரியின் உள்ளே போராட்டம் நடந்ததால் போலீசார் வெளியே பாதுகாப்பு பணியில் நின்றனர்.இதையடுத்து கல்லூரி பேராசிரியர்கள் பேச்சுவார்த்தை நடத்தியும் மாணவ-மாணவிகள் போராட்டத்தை கைவிடவில்லை. இந்த நிலையில் மாலை 4 மணி அளவில் மாணவ-மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story