விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி திருவாரூரில் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்,
ஆர்ப்பாட்டம்
திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் நிலவி வரும் வறட்சியால் சம்பா பயிர்கள் கருகின. இதனால் மனமுடைந்து விவசாயிகள் பலர் தற்கொலை செய்து கொண்டனர். பலர் பயிர்கள் கருகியதால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இறந்தனர். இவ்வாறு மரணம் அடைந்த விவசாயிகளுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், வேலை இழந்த விவசாய தொழிலாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்்்கைகளை வலியுறுத்தி அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் திருவாரூரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு...
அதன்படி திருவாரூர் உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார். மாநில தலைவர் வாலண்டினா, கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் நிர்வாகிகள் பவானி, தேவகி, கோமதி, கலைச்செல்வி, சுமதி சந்திரோதயம், தமிழ்ச்செல்வி, தனம் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகளுக்கு நிவாரண தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என கோஷம் எழுப்பப்பட்டது.

Next Story