குடியரசு தின விழா: கடலூரில், கலெக்டர் ராஜேஷ் தேசியக்கொடி ஏற்றினார்
கடலூரில் நடந்த குடியரசு தின விழாவில் கலெக்டர் ராஜேஷ் தேசியக்கொடி ஏற்றினார்.
கடலூர்,
குடியரசு தின விழா
குடியரசு தின விழா நாடு முழுவதும் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் மஞ்சக்குப்பத்தில் உள்ள அண்ணா விளையாட்டு மைதானத்தில் குடியரசு தின விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மைதான நுழைவு வாயிலில் இருந்து விழா நடக்கும் இடம் வரை அலங்கார தோரணங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
காலை 8 மணிக்கு கலெக்டர் ராஜேஷ், தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர் திறந்த ஜீப்பில் சென்று ஆயுதப்படை போலீசார், தீயணைப்பு துறை, ஊர்க்காவல்படை, என்.சி.சி., என்.எஸ்.எஸ்., இளம்செஞ்சிலுவை சங்க மாணவ– மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அவருடன் போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் இருந்தார்.
காவலர் பதக்கம்
இதனை தொடர்ந்து காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 38 காவலர்களுக்கு முதல்–அமைச்சரின் காவலர் பதக்கங்களையும், சான்றிதழ்களையும் கலெக்டர் ராஜேஷ் வழங்கினார். இதையடுத்து விழா மேடையின் வலது புறத்தில் அமர்ந்து இருந்த தியாகிகளுக்கும், மறைந்த தியாகிகளின் மனைவிகளுக்கும் பொன்னாடை அணிவித்து கலெக்டர் கவுரவித்தார்.
பின்னர் சிறப்பாக பணியாற்றியதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் விஜயா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் குமார், கடலூர் சப்–கலெக்டர் ஜானிடாம்வர்கீஸ், வேளாண்மை இணை இயக்குனர் மனோகரன், சிதம்பரம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராமமூர்த்தி ஆகியோருக்கும், பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் 214 பேருக்கும் கலெக்டர் ராஜேஷ் விருது வழங்கினார்.
49 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
இதைத்தொடர்ந்து முன்னாள் படை வீரர் நலத்துறை, வருவாய்த்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகம், மாவட்ட சமூக நலத்துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை ஆகியவற்றின் மூலம் 49 பேருக்கு ரூ.13 லட்சத்து ஆயிரத்து 955 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நிறைவு நிகழ்ச்சியாக மாணவ– மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் கடலூர் புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 300 பேர் தேசிய கொடி நிறத்தில் ஆடை அணிந்து நடனமாடி பார்வையாளர்களை கவர்ந்தனர். குறிப்பாக ராட்டை, கண்ணாடி, இந்திய வரைபடம் போன்று வடிவமைத்து காட்டி அனைவரின் பாராட்டையும் பெற்றனர். ஓயாசிஸ் சிறப்பு பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும் நடந்தது. இதில் ஊனத்தையும் பொருட்படுத்தாமல் மாணவர்கள் நடனமாடினர். பண்ருட்டி முத்தையா மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தாமரை பூ போன்று வடிவமைத்து நடனமாடினர்.
கொட்டும் மழையில் கலைநிகழ்ச்சி
மொத்தம் 9 பள்ளிகளை சேர்ந்த மாணவ– மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. கலைநிகழ்ச்சி நடக்கும் போது மழை கொட்டியது. இருப்பினும் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் மாணவ– மாணவிகள் கலைநிகழ்ச்சிகளை நடத்தினர். இதை மேடையில் இருந்து அதிகாரிகள் பார்வையிட்டனர்.
தொடர்ந்து கலைநிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்திய பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. முதல் பரிசு கடலூர் புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கும், 2–வது பரிசு பண்ருட்டி முத்தையா மேல்நிலைப்பள்ளிக்கும், 3–வது பரிசு கடலூர் சேவை இல்ல மேல்நிலைப்பள்ளிக்கும் வழங்கப்பட்டது. சிறப்பு பரிசு ஓயாசிஸ் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
பரிசுகளை மாணவ– மாணவிகள் ஆசிரியர்களுடன் வந்து பெற்றுச்சென்றனர். விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் மனைவி கீதாவாணி, சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் ஜவகர்லால், நகராட்சி ஆணையாளர் விஜயகுமார், கோட்டாட்சியர்கள் விஜயலட்சுமி, செந்தில்குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் தங்கவேல் உள்பட அனைத்துத்துறை அதிகாரிகள், மாணவ–மாணவிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். விழாவை பேராசிரியர் ஜெயந்தி ரவிச்சந்திரன் தொகுத்து வழங்கினார்.
பாதுகாப்பு
விழாவையொட்டி கடலூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மதிவாணன், துணை போலீஸ் சூப்பிரண்டு நரசிம்மன் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முன்னதாக விழாவுக்கு வந்த அனைவரையும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்த பிறகே உள்ளே செல்ல போலீசார் அனுமதித்தனர்.

Next Story