கிருஷ்ணகிரி அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை
கிருஷ்ணகிரி அருகே குடும்ப தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி
பெண் தற்கொலை
கிருஷ்ணகிரி அருகே உள்ள சின்னேப்பள்ளியைச் சேர்ந்தவர் முனிரத்னம். இவர் கல் உடைக்கும் தொழிலாளி. இவருடைய மனைவி சுதா (வயது 28). இவர்களுக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் கணவன் - மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று மீண்டும் கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சுதா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
போலீசார் விசாரணை
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவருடைய குடும்பத்தினர் இது குறித்து மகராஜகடை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராஜேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் சுதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story