மும்பையில் சில இடங்களில் 31–ந் தேதி 20 சதவீதம் குடிநீர் வெட்டு


மும்பையில் சில இடங்களில் 31–ந் தேதி 20 சதவீதம் குடிநீர் வெட்டு
x
தினத்தந்தி 28 Jan 2017 4:20 AM IST (Updated: 28 Jan 2017 4:20 AM IST)
t-max-icont-min-icon

மும்பை பாண்டுப் காம்பளக்சில் உள்ள நீரேற்றும் நிலையத்தில் புதிய குழாய் பதிக்கும் பணி வருகிற 31–ந் தேதி நடக்கிறது.

மும்பை

மும்பை பாண்டுப் காம்பளக்சில் உள்ள நீரேற்றும் நிலையத்தில் புதிய குழாய் பதிக்கும் பணி வருகிற 31–ந் தேதி நடக்கிறது. இதன் காரணமாக அன்று காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை 12 மணி நேரத்திற்கு பாந்திரா முதல் தகிசர் வரையிலும், ஏ, சி, டி, ஜிதெற்கு, ஜிவடக்கு ஆகிய வார்டுகளில் 20 சதவீதம் குடிநீர் வெட்டு செய்யப்படும். இந்த தகவல் மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story