மத்திய அரசை கண்டித்து பிரசார இயக்கம் மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் நடந்தது
திருவாரூரில் மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் மத்திய அரசை கண்டித்து பிரசார இயக்கம் நடைபெற்றது.
திருவாரூர்,
பிரசார இயக்கம்
குடும்ப அட்டைகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதில் ஏற்பட்டு வரும் முறைகேடுகளை தடுத்திட வேண்டும். சம்பா பயிர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், வேலை வாய்ப்பை இழந்த விவசாய தொழிலாளர்களுக்கும் உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும். மக்களை பாதிக்கும் மின்னணு பண பரிவர்த்தனையும், 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த மத்திய அரசை கண்டித்து பிரசார இயக்கம் நடைபெறுவதாக இந்திய மாதர் தேசிய சம்மேளனம் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி திருவாரூரில் மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் மத்திய அரசை கண்டித்து பிரசார இயக்கம் நடந்தது. பிரசார இயக்கத்துக்கு நகர செயலாளர் அன்னபாக்கியம் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் பத்மாவதி கலந்து கொண்டு பேசினார்.
கோஷங்கள்
இதில் மாவட்ட செயலாளர் தமயந்தி, மாவட்ட தலைவர் ஜெயா, ஒன்றிய செயலாளர் வீரம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது மத்திய அரசை கண்டித்தும், விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கிட கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.

Next Story