நாராயணசாமி தொடங்கி வைத்தார் மாகியில் கலைவிழா
மாகியில் நடைபெறும் கலைவிழாவினை முதல்–அமைச்சர் நாராயணசாமி தொடங்கிவைத்தார்.
புதுச்சேரி,
மாகி சென்றார்
அரசு முறை பயணமாக முதல்–அமைச்சர் நாராயணசாமி மாகி சென்றார். அங்கு அவர் கட்சி நிர்வாகிகளை சந்தித்துப் பேசினார்.
மறைந்த முன்னாள் துணை சபாநாயகர் ஏ.வி.ஸ்ரீதரனின் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மாகியில் உள்ள அரசு அதிகாரிகளுடன் அவர் நலத்திட்ட உதவிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
கலைவிழா
தொடர்ந்து அவர் மாலையில் ஜவகர்லால் நேரு மேல்நிலைப்பள்ளியின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டார். இந்த விழாவில் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் வல்சராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
மாகியில் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்ட முதல்–அமைச்சர் நாராயணசாமி நேற்று இரவு மாகியில் இருந்து ரெயில் மூலம் புறப்பட்டார். இன்று (திங்கட்கிழமை) காலை அவர் புதுச்சேரி வருகிறார்.

Next Story