கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம்


கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம்
x
தினத்தந்தி 12 Feb 2017 3:30 AM IST (Updated: 12 Feb 2017 2:03 AM IST)
t-max-icont-min-icon

லால்புரத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உண்ணாவிரத போராட்டம்

சிதம்பரம் நகரில் உள்ள குடியிருப்புகள் மற்றும் கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை சுத்திகரிப்பதற்காக சிதம்பரம் அருகே லால்புரம் ஊராட்சியின் மையப்பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது. இந்த நிலையில் லால்புரத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கூடாது.

இங்கு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தால் நிலத்தடி நீரின் தன்மை மாறி பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே ஊருக்குள் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்காமல், ஊருக்கு வெளியே அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை லால்புரம் ஊராட்சியை சேர்ந்த பொது மக்கள் மணலூர் பஸ் நிறுத்தம் அருகே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் சேகர், நடனமயிலோன், கவுன்சிலர்கள் லதா, இளவரசி, தமிமுன்அன்சாரி, தனசேகர் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story