எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி கல்லலில் மாட்டு வண்டி பந்தயம்
காரைக்குடி அருகே உள்ள கல்லலில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடத்தப்பட்டது.
கல்லல்,
மாட்டு வண்டி பந்தயம்
காரைக்குடி அருகே உள்ள கல்லலில் ஒன்றிய ஜெயலலிதா பேரவை சார்பில் முன்னாள் முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மற்றும் கல்லல் சக்திவேல் உடையப்பா நினைவாக மாட்டு பந்தயம் நடத்தப்பட்டது. கல்லல்–காரைக்குடி சாலையில் நடந்த மாட்டு வண்டி பந்தயத்தில் மொத்தம் 23 மாட்டு வண்டிகள் கலந்துகொண்டன. பந்தயத்தை ஜெயலலிதா பேரவை செயலாளர் சண்முகசுந்தரம், உடையப்பா நாச்சியப்பன், சோமன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பெரிய மாட்டு வண்டிகள், சின்ன மாட்டு வண்டிகள் என 2 பிரிவுகளாக பந்தயம் நடைபெற்றது.
பரிசுகள்முதலில் நடைபெற்ற பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் 10 மாட்டு வண்டிகள் கலந்துகொண்டன. இதில் முதல் பரிசை மதுரை ஆனையூரை சேர்ந்த செல்வம் அம்பலம் வண்டியும், 2–வது பரிசை மலம்பட்டி காயத்திரி வண்டியும், 3–வது பரிசை விராமதி சந்திரன் வண்டியும் பெற்றன.
இதனைத்தொடர்ந்து நடைபெற்ற சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் மொத்தம் 13 மாட்டு வண்டிகள் கலந்துகொண்டன. இந்த பந்தயத்தில் முதல் பரிசை மாம்பட்டி பாரிவள்ளல் வண்டியும், 2–வது பரிசை வேப்பங்குளம் தலையாரி சோனைமுத்து வண்டியும், 3–வது பரிசை சூரத்துப்பட்டி இளவரசு வண்டியும் பெற்றன. இதனையொட்டி வேப்பங்குளம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜ், ஒன்றிய இளைஞரணி துணைத்தலைவர் வேல்முருகேசன், ஆலம்பட்டு முன்னாள் கவுன்சிலர் அசோகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.