கடைகளின் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்


கடைகளின் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 12 Feb 2017 4:15 AM IST (Updated: 12 Feb 2017 2:45 AM IST)
t-max-icont-min-icon

கடைகளின் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருச்சி,

திருச்சி-புதுக்கோட்டை சாலையில், சுப்பிரமணியபுரத்தில் இருந்து மாத்தூர் வரை சாலையோரங்களில் உள்ள கடைகளின் முன்பு பெயர் பலகைகள் மற்றும் விளம்பர பலகைகள் வைத்து ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டு இருந்தன. இந்தநிலையில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் உதவி கோட்ட பொறியாளர் ராஜூ தலைமையிலான அதிகாரிகள் நேற்று காலை சுப்பிரமணியபுரம் பகுதியில் கடைகளின் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கடைகளின் பெயர் பலகைகள், விளம்பர பலகைகள் ஆகியவை அகற்றப்பட்டன. மேலும், சில கடை உரிமையாளர்கள் ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே உடனடியாக அகற்றி கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் எச்சரிக்கையும் செய்தனர். ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை தொடர்ந்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். 

Next Story