சினிமாவில் வரும் காட்சிபோல் “வரத்து வாரியை காணவில்லை” என்று போலீசில் புகார்
சினிமாவில் வரும் காட்சி போல், திருச்சி அருகே “வரத்து வாரியை காணவில்லை” என்று போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமயபுரம்,
சினிமா காட்சி போல்...
ஒரு திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலு, “கிணற்றை காணவில்லை” என்று கூறி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுப்பார். கிணற்றையே காணவில்லையா? என்று போலீசார் அதிர்ச்சியடைவார்கள். இந்த காட்சி மிகுந்த நகைச்சுவையாக அமைந்திருந்தது. இந்நிலையில் அந்த சினிமா காட்சியில் வருவது போன்று, “வரத்து வாரியை காணவில்லை” என்று ஒருவர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த ருசிகர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு;-
வரத்து வாரியை காணவில்லை
திருச்சி மாவட்டம், சிறுகனூர் ஈ.பி. ரோட்டை சேர்ந்தவர் அரசபிரபாகரன் (வயது37). இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில இளைஞரணி துணை செயலாளராக உள்ளார். மேலும் அப்பகுதியில் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். இவர் நேற்று சிறுகனூர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிறுகனூரில் திருப்பட்டூர் செல்லும் சாலையில் அரசுக்கு சொந்தமான நீர் வரத்துவாரி இருந்தது. தற்போது அந்த வரத்துவாரியை காணவில்லை. இதனை கண்டுபிடித்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன், என்று கூறியிருந்தார். புகார் மனுவை பெற்றுக்கொண்ட போலீசார், நடவடிக்கை எடுக்கிறோம் என்று சிரித்துக்கொண்டே கூறினர்.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
இது குறித்து அரசபிரபாகரனிடம் கேட்டபோது, கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருப்பட்டூர் செல்லும் சாலையில் உள்ள அரசு புறம்போக்கு நீர்வரத்து வாரியை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது என்பதை அறிந்து, இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்குமாறு மண்ணச்சநல்லூர் தாசில்தாரிடம் மனு கொடுத்தேன். அதற்கு அவர், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். மேலும் கட்டப்பட்டு வரும் கட்டிடத்திற்கு சிறுகனூர் மின்வாரிய அலுவலர்கள் மின் இணைப்பு கொடுத்துள்ளார்கள்.
போலியாக பட்டா தயாரிக்கப்பட்டுள்ள அந்த இடத்தின் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் ரூ.1 கோடியை தாண்டும். இது குறித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் தலையிட்டு உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறினார். வரத்து வாரியை காணவில்லை என்று போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story