206 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரி தகவல்
திருவாரூர் மாவட்டத்தில் 206 அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன என்று நுகர்பொருள் வாணிப கழக அதிகாரி தெரிவித்துள்ளார்.
குடவாசல்,
குறைதீர்க்கும் முகாம்
குடவாசல் அருகே பெருமங்கலத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கான குறைதீர்க்கும் முகாம் நடந்தது. முகாமிற்கு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர்அழகிரிசாமி தலைமை தாங்கினார். முகாமில் பறக்கும் படை தனி தாசில்தார் பரஞ்சோதி, வட்ட வழங்கல் அலுவலர் ராஜராஜேந்திரன், கூட்டுறவு சார்பதிவாளர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் 26 பேர் தங்களின் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்வது குறித்து மனு அளித்தனர். அவர்களுக்கு உடனடியாக குடும்ப அட்டையில் பெயர் நீக்கல், சேர்த்தல், திருத்தம் செய்யப்பட்டது.
ஆய்வு
இதை தொடர்ந்து முதுநிலை மண்டல மேலாளர் அழகிரிசாமி குடவாசலில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்தார். பின்னர் குடவாசலில் வட்ட சேமிப்பு கிடங்கில் உள்ள அரிசி, சர்க்கரை, பருப்பு, ஆயில் ஆகியவற்றையும், குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் சிமெண்டு ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
திருவாரூர் மாவட்டத்தில் தற்போது சம்பா அறுவடை பணி நடைபெற்று வருவதால் அரசு மூலம் நெல் கொள்முதல் செய்ய 206 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதில் விவசாயிகள் நெல் விற்பனை செய்து பயன்பெற வேண்டும். அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உள்ள குறைகளை என்னுடைய செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். குடவாசல் பகுதியில் உள்ள மேலராமன் சேத்தி கிராம பொதுமக்கள் கோரிக்கைகளை ஏற்று மாவட்ட கலெக்டரின் அனுமதியுடன் உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின் போது சேமிப்பு கிடங்கு உதவி தர ஆய்வாளர் நாகராஜன், குடவாசல் நேரடி நெல் கொள்முதல் நிலைய பொருளாளர் மதன்குமார் உள்பட பலர் உடன் இருந் தனர்.

Next Story