வெள்ளியணையில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய அரசு அலுவலகம்
வெள்ளியணையில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய அரசு அலுவலகத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வெள்ளியணை,
குடியிருப்புடன் கூடிய அலுவலகம்
கரூர் மாவட்டம் வெள்ளியணையில் வருவாய் ஆய்வாளர் தங்கி அப்பகுதி கிராம மக்களுக்கு சேவை செய்யும் பொருட்டு குடியிருப்புடன் கூடிய அலுவலகம் புதியதாக கட்டப்பட்டு ஓராண்டுக்கு முன்பு திறக்கப்பட்டது. ஆனால் திறக்கப்பட்டு ஓராண்டாகியும் இதுவரை சம்பந்தப்பட்ட அலுவலர் பயன்படுத்தாமையால் தற்போது வரை பூட்டியே கிடக்கிறது. மேலும் அலுவலரின் பயன்பாட்டிற்காக நிலத்தடி நீர்த்தேக்க தொட்டி ஒன்றும் கட்டப்பட்டு அதன் மேல் மூடி போடப்படாமல் திறந்தே கிடக்கிறது. அதன் அருகே அங்கன்வாடி மையம், அரசுப்பள்ளி ஆகியவை உள்ளதால் குழந்தைகள் அப்பகுதியில் விளையாடும்போது தொட்டிக்குள் தவறி விழுந்து ஆபத்தில் சிக்கி கொள்ளும் நிலை உள்ளது.
கோரிக்கை
அரசு நிதியை செலவழித்து கட்டப்பட்ட அலுவலகம் பயன்படுத்தப்படாமையால் சமூக விரோதிகள் அங்கு அமர்ந்து மது அருந்துவதும், சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதுமாக உள்ளனர். இந்த நிலை தொடர்ந்தால் அவ்வலுவலக கட்டிடம் சேதமடைவதுடன், கிராம மக்களுக்கு வருவாய் ஆய்வாளர் அங்கேயே தங்கி எந்நேரமும் சேவை செய்ய வேண்டும் என்ற அரசின் நோக்கமும் வீணாகிவிடும். எனவே உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என கிராம மக்களும், சமூக ஆர்வலர்களும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story