20,612 மாணவர்கள் பிளஸ்-2 தேர்வு எழுதுகின்றனர் கலெக்டர் தகவல்
புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வினை 20,612 மாணவர்கள் எழுதுகின்றனர் என கலெக்டர் கணேஷ் கூறினார்.
புதுக்கோட்டை,
ஆலோசனை கூட்டம்
தமிழக அரசு பள்ளிகல்வித்துறையின் சார்பில் நடைபெற உள்ள பொதுத்தேர்வுகளை சிறப்பாக நடத்தும் வகையில் தேர்வுக்குழு உறுப்பினர்களுடனான ஆலோசனை கூட்டம் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில், நடைபெற்றது. கூட்டத்தை மாவட்ட கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
பொதுத்தேர்வு
தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மார்ச் 2017-ம் ஆண்டிற்கான மேல்நிலை, மெட்ரிக் மற்றும் இடைநிலை பொதுத்தேர்வுகள் விரைவில் நடைபெற உள்ளது. அதனடிப்படையில் இந்த அரசு பொதுத்தேர்வுகளை புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறப்பாக நடத்தும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு பணிகள் குறித்து தேர்வுக்குழு உறுப்பினர்களுடனான ஆலோசனைக் கூட்டம் தொடங்கி வைக்கப்பட்டு்ள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வினை 20,612 மாணவ, மாணவிகள் 64 தேர்வு மையங்களில் எழுத உள்ளனர். இதே போன்று எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வினை 24,824 மாணவ, மாணவிகள் 95 தேர்வு மையங்களில் எழுத உள்ளனர்.
தீவிர கண்காணிப்பு
தேர்வு மையங்களில் மின்சார வாரியம் மூலம் தடையற்ற மின்சாரம் வழங்கவும், தேர்வு நாட்களில் அதிக பஸ் வசதிகள், ஏற்படுத்தவும், காவல்துறையின் மூலம் போதுமான காவலர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தவும், மேலும் தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்கும் வகையில் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி சாந்தி, மாவட்ட கல்வி அலுவலர்கள் பரமசிவம் (புதுக்கோட்டை), சந்தியா (அறந்தாங்கி), பள்ளிக்கல்வித்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை, மின்சார வாரிய அதிகாரிகள் உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story