விராலிமலை அ.தி.மு.க.வினர், ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு


விராலிமலை அ.தி.மு.க.வினர், ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு
x
தினத்தந்தி 12 Feb 2017 4:00 AM IST (Updated: 12 Feb 2017 2:45 AM IST)
t-max-icont-min-icon

விராலிமலை அ.தி.மு.க.வினர், ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு

விராலிமலை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா மீது அதிருப்தி அடைந்து பல்வேறு தரப்பினர் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று விராலிமலை சுங்கச்சாவடியில், முன்னாள் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சுப்பையா தலைமையில், விராலிமலையில் உள்ள 21 ஊராட்சி செயலாளர்கள், 150 கிளை செயலாளர்கள், ஒன்றிய பொறுப்பாளர்கள், தீபா பேரவையினர், தொண்டர்கள் ஒரு இடத்தில் கூடினர். பின்னர் அவர்கள் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாகவும், மேலும் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் குறித்து அரசு நீதி விசாரணை நடத்த வேண்டும் எனவும் கூறினர். பின்னர் அவர்கள் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக இரவு சென்னை புறப்பட்டு சென்றனர். 

Next Story