சிறுமி கொலை செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்
சிறுமி கொலை செய்யப்பட்டதை கண்டித்து அரியலூரில் காங்கிரஸ் மகளிர் அணியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர்,
ஆர்ப்பாட்டம்
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே சிறுமி பாலியல் வன்கொலைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்து அரியலூரில் காங்கிரஸ் மகளிர் அணியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாநில மகிளா காங்கிரஸ் தலைவர் ஜான்சிராணி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சின்னபொண்ணு வரவேற்று பேசினார். மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜேந்திரன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.
சி.பி.சி.ஐ.டி. விசாரணை
ஆர்ப்பாட்டத்தில், சிறுமி கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், இக்கொலையின் பின்னணியில் உள்ள இந்து முன்னணி நிர்வாகி உள்ளிட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும், குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை வழங்க வேண்டும், குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது, சிறுமியின் குடும்பத்துக்கு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட இழப்பீட்டு தொகையை ரூ.25 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும், சிறுமியின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், மத்திய, மாநில அரசுகள் இதுபோன்ற கொலைகள் இனி நிகழாத வண்ணம் தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. தங்கராசு, செய்தி தொடர் பாளர் சிவக்குமார், சந்திர சேகர், பழனிசாமி, ரவிச்சந் திரபோஸ் உள்பட மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து மாநில மகிளா காங்கிரஸ் தலைவர் ஜான்சிராணி, கொலை செய்யப்பட்ட சிறுமியின் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.

Next Story