மீன்சுருட்டி அருகே 50-க்கும் மேற்பட்டோர் மர்ம காய்ச்சலால் பாதிப்பு

மீன்சுருட்டி,
அரியலூர் மாவட்டம் மீன் சுருட்டி அருகே பாகல்மேடு கிராமத்தில் உள்ள காலனி தெருவில் கடந்த 2 வார காலமாக பொதுமக்கள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த மீன்சுருட்டி ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் லட்சுமிதரன் தலைமையில் மருத்துவ குழுவினர் உடனடியாக அங்கு சென்று பொதுமக்களுக்கு பரிசோதனை நடத்தினர். இதில் சிறுவர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோருக்கு மர்ம காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. உடனடியாக அவர்களை மீன்சுருட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்து முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில், சாந்தி (வயது 40), மினுக்காச்சி (60), கண்ணன் (23), கருப்புசாமி (24), திருமூர்த்தி (24), வசந்தி (50), வெண்ணிலா (40), சச்சின் (3), பிருந்தா (8), ரேகா (22), மேகலா (38), கவுசிக் (7), ஜனனி (12) உள்பட 50-க்கும் மேற்பட்டோருக்கு ரத்த பரிசோதனையும், சிகிச்சையும் அளிக்கப்பட்டது. மேலும் கிராமத்தில் உள்ள பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த காய்ச்சல் சாதாரண காய்ச்சல் தான் என்றும், எனவே யாரும் பயப்பட வேண்டாம் என்றும் வட்டார மருத்துவ அலுவலர் லட்சுமி தரன் தெரிவித்தார்.

Next Story