கன்னியாகுமரி அருகே கடலில் மீனவர் வலையில் அம்மன் சிலை சிக்கியது
கன்னியாகுமரி அருகே கடலில் மீனவர் வலையில் அம்மன் சிலை சிக்கியது. அதை அதிகாரிகள் கைப்பற்றி அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைத்தனர்.
கன்னியாகுமரி,
மீனவர்கள்
கன்னியாகுமரி அலங்காரமாத தெருவை சேர்ந்தவர் யேசு ரத்தினம். இவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் இவரும் அதே பகுதியை சேர்ந்த 4 மீனவர்களும் கடலில் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் கன்னியாகுமரி அருகே உள்ள லீபுரம் கல்லுவிளை கடல்பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த போது, வலையில் அதிக எடையுள்ள ஒரு பொருள் சிக்கியது.
இதனால், அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் வலையை இழுத்து கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர், வலையை பார்வையிட்ட போது, அதில் சுமார் 5½ உயரமுள்ள அம்மன் சிலை சிக்கியிருந்தது. இந்த சிலை கல்லால் ஆனது. சுமார் 250 கிலோ எடை கொண்டது.
அதிகாரிகள் கைப்பற்றினர்
இதுகுறித்து, மீனவர்கள் போலீசாருக்கும், அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த கன்னியாகுமரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணகுமார், வருவாய் ஆய்வாளர் திவான், கிராம நிர்வாக அலுவலர் (பொறுப்பு) ஜெயமணி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.
பின்னர், அந்த சிலையை அதிகாரிகள் கைப்பற்றி கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைத்தனர். அங்கு சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

Next Story