குமரி மாவட்ட கோர்ட்டுகளில் லோக் அதாலத்: 899 வழக்குகளுக்கு தீர்வு; ரூ.5 கோடிக்கு சமரசம்


குமரி மாவட்ட கோர்ட்டுகளில் லோக் அதாலத்: 899 வழக்குகளுக்கு தீர்வு; ரூ.5 கோடிக்கு சமரசம்
x
தினத்தந்தி 12 Feb 2017 4:15 AM IST (Updated: 12 Feb 2017 2:46 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்ட கோர்ட்டுகளில் நேற்று நடந்த லோக் அதாலத் மூலம் 899 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.5 கோடிக்கு சமரசம் செய்யபட்டது.

நாகர்கோவில்,

லோக் அதாலத்


கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக லோக் அதாலத் (மக்கள் நீதிமன்றம்) நடத்தப்பட்டு வருகிறது. தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நடைபெற்று வரும் இந்த லோக் அதாலத் நிகழ்ச்சிக்கு வழக்கில் தொடர்புடைய இருதரப்பினரும் அழைக்கப்பட்டு அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காணப்படுகிறது.

இந்த லோக் அதாலத் நிகழ்ச்சி குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், குழித்துறை, பத்மநாபபுரம், இரணியல் மற்றும் பூதப்பாண்டி ஆகிய 5 கோர்ட்டுகளிலும் நேற்று நடந்தது. இதில் காசோலை மோசடி வழக்குகள், விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள் உள்ளிட்ட வழக்குகள் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டன. நாகர்கோவிலில் நடந்த லே£க்அதாலத் நிகழ்ச்சியை மாவட்ட நீதிபதி சதிகுமார் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

பொருளாதார வளர்ச்சி


கோர்ட்டுகளில் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காண்பதற்கான மாற்று முறையாக லோக் அதாலத் நடத்தப்படுகிறது. இதில் இருதரப்பினரிடமும் சமரச தீர்வு ஏற்படுத்தப்படுகிறது. மேலை நாடுகளிலும் இந்த முறை பின்பற்றப்படுகிறது. லோக் அதாலத் மூலம் பொருளாதார வளர்ச்சி ஏற்படுகிறது. நீண்ட காலமாக வழக்கு நிலுவையில் இருப்பதால் சராசரி மனிதன் பாதிக்கப்படுகிறான்.

லோக் அதாலத் மூலம் சராசரி மனிதன் பாதிப்பில் இருந்து காப்பாற்றப்படுகிறான். லோக் அதாலத் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வழக்குகளுக்கு தீர்வு


நிகழ்ச்சியில் மாவட்ட மக்கள் நீதிமன்ற நீதிபதி ஜான் ஆர்.டி.சந்தோ‌ஷம், வனத்துறை நீதிபதி செங்கமலச்செல்வன், முதன்மை கோர்ட்டு நீதிபதி முருகானந்தம் தலைமையில் வழக்குகளுக்கு விசாரணை நடத்தப்பட்டது. குமரி மாவட்டத்தில் லோக் அதாலத் நிகழ்ச்சியில் 8,142 வழக்குகள் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் 899 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் ரூ.5 கோடியே 12 லட்சத்து 81 ஆயிரத்து 75–க்கு சமரசம் செய்யப்பட்டது.


Next Story