தஞ்சை அருகே விபத்து லாரி மீது மினி லாரி மோதல்; 2 தொழிலாளர்கள் பலி
தஞ்சை அருகே மேம்பாலத்தில் ஜல்லி ஏற்றிச்சென்ற லாரி மீது ஆக்சிஜன் சிலிண்டர்கள் ஏற்றிச்சென்ற மினி லாரி மோதியதில் 2 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர். இதில் சிலிண்டர்கள் கீழே விழுந்து ஆக்சிஜன் கசிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தஞ்சாவூர்,
ஆக்சிஜன் சிலிண்டர்கள்
திருச்சி மாவட்டம் துவாக்குடியில் இருந்து ஒரு மினி லாரி திருவாரூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த மினி லாரியில் திருவாரூர் மருத்துவகல்லூரிக்கு உயிர்காக்கும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் கொண்டு செல்லப்பட்டன. மினி லாரியை திருச்சி மாவட்டம் துவாக்குடியை சேர்ந்த பொன்னுசாமி மகன் பாஸ்கர் (வயது49) ஓட்டி வந்தார்.
இதில் திருச்சி துவாக்குடி மாதாகோவில் தெருவை சேர்ந்த அண்ணாதுரை மகன் அகஸ்டின்ராஜ் (35), முஸ்லிம் ராவுத்தர் தெருவை சேர்ந்த சோலைமுத்து மகன் முனியசாமி (43) ஆகியோரும் வந்தனர். இவர்கள் 2 பேரும் கூலி தொழிலாளர்கள் ஆவர். இவர்கள் 2 பேரும் மினி லாரியின் முன்பகுதியில் டிரைவர் அருகே அமர்ந்து வந்தனர்.
2 தொழிலாளர்கள் பலி
மினிலாரி தஞ்சையை அடுத்த விளார் பகுதியில் உள்ள புறவழிச்சாலை மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னால் கரூரில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கு ஜல்லிக்கற்கள் ஏற்றிக்கொண்டு சென்ற லாரியை, மினி லாரி முந்தி செல்ல முயன்ற போது எதிர்பாராத விதமாக லாரியின் பின்னால் பயங்கரமாக மோதியது. இதில் மினி லாரியில் இருந்த தொழிலாளர்கள் அகஸ்டின்ராஜ், முனியசாமி ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.
மினி லாரி டிரைவர் பாஸ்கர் படுகாயம் அடைந்தார். அவரை உடனடியாக தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து லாரி டிரைவர் பெரியகுளத்தை அடுத்த ஜெயமங்களம் மறவர் தெருவை சேர்ந்த கருப்பையா (31) தஞ்சை தாலுகா போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
போக்குவரத்து பாதிப்பு
இந்த நிலையில் லாரியில் மோதிய வேகத்தில் மினிலாரியில் இருந்த 30-க்கும் மேற்பட்ட ஆக்சிஜன் சிலிண்டர்கள் சாலையில் விழுந்தன. இதில் சில சிலிண்டர்களில் கசிவு ஏற்பட்டு அந்த பகுதி முழுவதும் வாடை வீசியது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் அந்த பகுதியில் தீ விபத்து ஏதுவும் ஏற்பட்டு விடக்கூடாது என புறவழிச்சாலையில் வந்த வாகனங்கள் அனைத்தும் பக்கவாட்டில் உள்ள சாலை வழியாக திருப்பி விடப்பட்டன.
இதையடுத்து அங்கு தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து சிலிண்டர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

Next Story