நீதிபதிகளுக்கும், வக்கீல்களுக்கும் இடையே பரஸ்பர உறவு இருந்தால் வழக்குகள் தேங்காது: ஐகோர்ட்டு நீதிபதி பேச்சு
நீதிபதிகளுக்கும், வக்கீல்களுக்கும் இடையே பரஸ்பர உறவு இருந்தால் வழக்குகள் தேங்காது திருப்பூரில் கோர்ட்டு திறப்பு விழாவில் ஐகோர்ட்டு நீதிபதி ஏ.எம்.பஷீர் அகமது பேச்சு
திருப்பூர்,
நீதிபதிகளுக்கும், வக்கீல்களுக்கும் இடையே பரஸ்பர உறவு இருந்தால் கோர்ட்டுகளில் வழக்குகள் தேங்காது என்று திருப்பூரில் புதிய கோர்ட்டுகள் திறப்பு விழாவில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஏ.எம்.பஷீர் அகமது பேசினார்.
புதிய கோர்ட்டுகள் திறப்பு விழா
திருப்பூரில் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண்.3, எண்.4 ஆகியவை புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. இந்த கோர்ட்டுகள், ஏற்கனவே திருப்பூர் தாசில்தார் அலுவலகம் அருகே உள்ள கோர்ட்டு வளாகத்தில் கூடுதல் விரைவு நீதிமன்றங்கள் செயல்பட்ட கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் திருப்பூர் மாவட்ட நீதித்துறை நிர்வாகத்துக்கு கீழ் இதுவரை 27 கோர்ட்டுகள் செயல்பட்டு வந்த நிலையில், தற்போது மேலும் 2 கோர்ட்டுகள் இணைந்துள்ளது. ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண்.3, எண்.4 ஆகிய கோர்ட்டுகளின் திறப்பு விழா நேற்று காலை கோர்ட்டு வளாகத்தில் நடைபெற்றது. சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஏ.எம்.பஷீர் அகமது புதிய கோர்ட்டுகளின் பெயர் பலகையை திறந்து வைத்தார். மேலும் அந்த கோர்ட்டுகளின் வழக்கு விசாரணையையும் அவர் தொடங்கி வைத்தார்.
பின்னர் திருப்பூர் வாலிபாளையத்தில் உள்ள ஒரு அரங்கில் தொடக்க விழா நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவுக்கு வந்திருந்தவர்களை திருப்பூர் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி அலமேலு நடராஜன் வரவேற்றார்.
விழாவில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஏ.எம்.பஷீர் அகமது பேசியதாவது:-
பரஸ்பர உறவு
நீதித்துறையில் நீதிபதியும், வக்கீல்களும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களை போன்றவர்கள். நீதிபதிகளுக்கும், வக்கீல்களுக்கும் இடையே பரஸ்பர உறவு இருக்க வேண்டும். அப்படி இருந்தால் கோர்ட்டுகளில் வழக்குகள் தேங்காது. எந்த பிரச்சினையும் இல்லாமல் சுமூகமான முறையில் நீதித்துறை செயல்பட முடியும். கோர்ட்டுகளில் ஒவ்வொரு நாளும் எடுக்கப்படும் வழக்கு விவரங்களை அந்தந்த நீதிபதிகள் தொடர்ந்து கண்காணித்தால் வழக்குகளின் தேக்கநிலையை தவிர்க்க முடியும். இளம் வக்கீல்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்பாக மனு செய்யும்போது, முடிந்தவரை மனுவில் வழக்கின் விவரங்களை தெளிவாக குறிப்பிட்டு கொடுத்தால் கோர்ட்டில் வழக்கு விசாரணையின் காலதாமதம் தவிர்க்கப்படும். மாவட்டத்தில் வக்கீல்கள்-நீதிபதிகள் கூட்டம் நடத்த வேண்டும் என்று இங்குள்ள வக்கீல்கள் தெரிவித்துள்ளனர்.
வக்கீல்கள்-நீதிபதிகள் கூட்டத்தின் நோக்கம் என்பது, கோர்ட்டுகளில் வழக்குகள் தேக்கநிலையை தவிர்க்கும் வகையில் வக்கீல்களும், நீதிபதிகளும் ஆலோசனை நடத்தி தீர்வு காண்பதற்காகத் தான். ஆனால் அந்த கூட்டம் நீதிபதியை பற்றி குறை கூறும் வகையில் சில இடங்களில் அமைந்து விடுகிறது. இதற்காகத்தான் அதுபோன்ற கூட்டங்களை நடத்துவதற்கு மாவட்ட நீதிபதிகள் ஆர்வம் காட்டுவதில்லை. வக்கீல்களின் கோரிக்கையை ஏற்று திருப்பூர் மாவட்டத்தில் வக்கீல்கள்-நீதிபதிகள் கூட்டம் நடத்துவதற்கு மாவட்ட நீதிபதி ஏற்பாடு செய்வார்.
இவ்வாறு அவர் பேசினார்.
குற்ற சம்பவங்கள் அதிகரிப்பு
விழாவில் கலெக்டர் எஸ்.ஜெயந்தி பேசும்போது, திருப்பூரில் உள்ள பனியன் தொழில் நிறுவனங்களில் வெளிமாவட்ட மக்கள் வேலை செய்து வருகிறார்கள். இவர்கள் குடும்பத்துடன் திருப்பூரில் தங்கியுள்ளனர். 10 லட்சம் பேர் வசித்து வருகிறார்கள். அதுபோல் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் 1 லட்சம் பேர் உள்ளனர்.
குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களும் தொழிலாளர்கள் போல் திருப்பூரில் பதுங்கி இருக்கிறார்கள். இதனால் குற்ற சம்பவங்கள் அதிகரித்து உள்ளன. கோர்ட்டுகளில் வழக்குகள் தேங்காமல் தவிர்க்கும் வகையில் இரண்டு ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. குற்றத்தடுப்பு நடவடிக்கைகளுக்கான கோர்ட்டு நடவடிக்கைக்கு மாவட்ட நிர்வாகம் தகுந்த ஒத்துழைப்பை வழங்கும் என்றார்.
விழாவில் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய் மாத்தூர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமா, திருப்பூர் பார் அசோசியேசன் தலைவர் பாலகுமார், அட்வகேட் அசோசியேசன் தலைவர் சிவபிரகாசம், திருப்பூர் மாவட்ட வக்கீல் சங்க தலைவர் சந்திரலேகா நம்பியார் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். முடிவில் திருப்பூர் மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஜெகநாதன் நன்றி கூறினார்.
விழாவில் நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள், வக்கீல்கள் மற்றும் கோர்ட்டு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story