அ.தி.மு.க.வை கட்டிக்காப்பாற்ற முதல்-அமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு துணையாக நிற்போம் முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னுச்சாமி அறிக்கை
அ.தி.மு.க.வை கட்டிக்காப்பாற்ற முதல்-அமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு துணையாக நிற்போம் என்று முன்னாள் எம்.எல்.ஏ பொன்னுச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
நிலைத்து நிற்கிறது
ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னுச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஏழை-எளிய, விவசாய, கைத்தறி, சிறுதொழில்கள் புரிவோர் வாழ்க்கையில் ஏற்றம் பெற எம்.ஜி.ஆர் அ.தி.மு.க.வை தோற்றுவித்தார். 1977-ம் ஆண்டு ஆட்சியும் அமைத்தார். அப்போது நானும் ஒரு தொண்டனாக பணியாற்றினேன் என்பதில் பெருமையும், பெருமிதமும் கொள்கிறேன்.
வாழ்வாங்கு வாழ்ந்து மக்கள் மனதில் இடம் பிடித்த எம்.ஜி.ஆர். 1987-ம் ஆண்டு டிசம்பர் 24-ந் தேதி மறைந்தார். அவர் மறைந்தாலும் அவர் ஆற்றிய பணியும், கொடுத்துவிட்டு சென்ற இரட்டை இலை சின்னமும் மக்கள் மனதில் இன்றளவும் நிலைத்து நிற்கிறது.
ஒன்றுபட்டு காப்போம்
எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பிறகு ஜெயலலிதா எம்.ஜி.ஆரின் வழிநின்று கழகத்தை கட்டிக்காத்து மக்களால் நான், மக்களுக்காக நான் என்று வெற்றிபெற்று ஆட்சி புரிந்தார். எதிர்பாராதவிதமாக ஜெயலலிதா மறைந்தார். அவர் மறைவுக்கு பிறகு மாபெரும் இந்த இயக்கத்தை கட்டிக்காப்பார்கள் என்ற அடிமட்ட தொண்டர்களின், இளைஞர்களின், பெண்களின் எண்ணத்துக்கு மாறாக நிகழ்வுகள் நடப்பதால் முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் ஒன்றிணைந்து எம்.ஜி.ஆர். தோற்றுவித்த ஜெயலலிதா கட்டிக்காத்த அ.தி.மு.க.வை ஒன்றுபட்டு காப்போம்.
துணை நிற்போம்
அதன்படி 2 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளராகவும், மாவட்ட மருத்துவர் அணி தலைவராகவும், பொதுக்குழு உறுப்பினராகவும் எல்லாவற்றுக்கும் மேலாக கடந்த 35 ஆண்டுகளாக தொண்டனாக இருக்கும் நானும், என்னை சேர்ந்தவர்களும் பெருந்துறை தொகுதி மக்களின் எண்ணத்துக்கு ஏற்ப அ.தி.மு.க.வை கட்டிக்காப்பாற்ற முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் துணை நிற்போம் என்று உறுதி கூறுகிறேன்.
இவ்வாறு முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னுச்சாமி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Next Story