புதுவை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் முடிவு என்ன? அன்பழகன் எம்.எல்.ஏ. விளக்கம்
புதுவையில் உள்ள அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் முடிவு எதுவும் எடுக்காமல் எந்த பக்கம் செல்வது என்ற குழப்பத்தில் இருந்து வருகிறார்கள்.
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்
அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் புதுச்சேரி முன்னாள் அமைச்சர் ப.கண்ணன் திடீரென்று அ.தி.மு.க.வில் இருந்து விலகினார். இந்தநிலையில் தமிழக அ.தி.மு.க.வில் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் தனித்தனி அணிகள் உருவான நிலையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நெல்லித்தோப்பு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் ஆதரவு தெரிவித்தார். இதனால் அவர் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து நெல்லித்தோப்பு தொகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் தங்கள் பொறுப்புகளை ராஜினாமா செய்தனர்.
மாநில அ.தி.மு.க. செயலாளரான புருஷோத்தமன், சசிகலாவுக்கு ஆதரவாக இருந்து வருகிறார். புதுவை மாநில அ.தி.மு.க.வில் 4 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். தமிழக அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பரபரப்பான சூழ்நிலையில் அ.தி.மு.க. சட்டமன்ற தலைவர் அன்பழகன் வீட்டில் எம்.எல்.ஏ.க்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் எம்.எல்.ஏ.க்கள் பாஸ்கர், வையாபுரி மணிகண்டன், அசனா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டம் சுமார் 3 மணி நேரம் நடந்தது.
முடிவு எடுக்கவில்லை
கூட்டம் முடிந்தபின் அன்பழகன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் அ.தி.மு. க.வில் ஒரு குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளது. எனவே புதுவையில் உள்ள அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஒன்று கூடி இது சம்பந்தமாக விவாதித்தோம். இன்றைய சூழல் பற்றி விவாதித்தோம். ஆனால் அதில் எந்த முடிவும் எடுக்கவில்லை. புதுவை மாநிலத்தில் கட்சியின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு அனைத்து கட்ட நிர்வாகிகளுடனும் பேசி அடுத்த கட்ட முடிவு எடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story