சிங்காரவேலர் சிலைக்கு நாராயணசாமி மரியாதை


சிங்காரவேலர் சிலைக்கு நாராயணசாமி மரியாதை
x
தினத்தந்தி 12 Feb 2017 4:00 AM IST (Updated: 12 Feb 2017 3:54 AM IST)
t-max-icont-min-icon

சிங்காரவேலர் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.





நினைவு தினம்

புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் சிங்காரவேலர் நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு கடலூர் சாலையில் உள்ள அவரது சிலைக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் அமைச்சர் கந்தசாமி, எம்.எல்.ஏ.க்கள் ஜெயமூர்த்தி, அனந்தராமன், டெல்லி சிறப்பு பிரதிநிதி ஜான்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தி.மு.க. சார்பில் சிங்காரவேலர் சிலைக்கு தி.மு.க. தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் வர்த்தகர் அணி அமைப்பாளர் சக்திவேல் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

திராவிடர் கழகம்

திராவிடர் கழக மாநில தலைவர் சிவ.வீரமணி தலைமையில் சிங்காரவேலர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் ராசு, அறிவழகன், இளங்கோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் பல்வேறு மீனவர் அமைப்புகளை சேர்ந்தவர்கள் சிங்காரவேலர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

Next Story