அம்மா திட்ட முகாம்


அம்மா திட்ட முகாம்
x
தினத்தந்தி 12 Feb 2017 4:11 AM IST (Updated: 12 Feb 2017 4:10 AM IST)
t-max-icont-min-icon

புதுகும்மிடிப்பூண்டி, மெய்யூர், ஜி.சி.எஸ். கண்டிகை ஊராட்சிகளில் அம்மா திட்ட முகாம் நடந்தது.

அம்மா திட்ட முகாம்

கும்மிடிப்பூண்டியை அடுத்த புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் தாசில்தார் ஐவண்ணன் தலைமையில் நடந்தது. சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் ஸ்ரீதர், வட்டவழங்கல் அதிகாரி இளவரசி, மண்டல துணை தாசில்தார் அருள்வளவன், வருவாய் ஆய்வாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் ரேஷன் கார்டு தொடர்பாக 25 மனுக்களும், உதவித்தொகை தொடர்பாக 18 மனுக்களும், பட்டா மற்றும் மாறுதல் தொடர்பாக 3 மனுக்களும், இதர மனுக்கள் 5 என மொத்தம் 51 மனுக்கள் பெறப்பட்டது. இதில் 30 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. மற்ற மனுக்கள் மீது பரிசீலனை நிலுவையில் உள்ளதாக தாசில்தார் ஐவண்ணன் தெரிவித்தார். முன்னதாக ஊராட்சி செயலாளர் சிட்டிபாபு வரவேற்றார். முடிவில் கிராம நிர்வாக அதிகாரி உதயா நன்றி கூறினார்.

மெய்யூர்

திருவள்ளூர் மாவட்டம் மெய்யூர் ஊராட்சி குருபுரம் கிராமத்தில் அம்மா திட்ட முகாம் நடந்தது. முகாமுக்கு ஊத்துக்கோட்டை தாசில்தார் விஜயலட்சுமி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து 14 கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார். இதில், உடனடி தீர்வு காணப்பட்ட 4 மனுக்களுக்கு அதற்கான ஆணைகள் வழங்கப்பட்டது. 10 மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தனி தாசில்தார் லதா, வட்டவழங்கல் அதிகாரி பிரீத்தி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மதன்குமார், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கோபி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக அனைவரையும் வருவாய் அதிகாரி ரமணி வரவேற்றார். முடிவில், கிராம நிர்வாக அதிகாரி மகாராஜன் நன்றி கூறினார்.

ஜி.சி.எஸ். கண்டிகை

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா ஜி.சி.எஸ். கண்டிகை ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் நடந்தது. இந்த முகாமுக்கு திருவள்ளூர் மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் மல்லிகா தலைமை தாங்கினார். பள்ளிப்பட்டு தனி தாசில்தார் சாந்தி, வட்ட வழங்கல் அலுவலர் வெண்ணிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த முகாமில் புதிய ரேஷன்கார்டு, முதியோர் உதவித்தொகை, ரேஷன்கார்டில் பெயர் திருத்தம், வீட்டு மனை பட்டா, திருமண உதவித்தொகை உள்பட பல கோரிக்கைகளை முன்வைத்து 50-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.

இந்த முகாமில் வருவாய் ஆய்வாளர் மகேந்திரன், கிராம நிர்வாக அலுவலர் புகழேந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story