திருவள்ளூரில் அ.தி.மு.க. நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு
திருவள்ளூர் நகர அ.தி.மு.க. நிர்வாகிகள் சார்பில் திருவள்ளூரில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நேற்று இரவு அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
திருவள்ளூர்
திருவள்ளூர் நகர அ.தி.மு.க. நிர்வாகிகள் சார்பில் திருவள்ளூரில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நேற்று இரவு அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு திருவள்ளூர் முன்னாள் நகர்மன்ற தலைவர் கமாண்டோ அ.பாஸ்கரன் தலைமை தாங்கினார்.
மாவட்ட இளைஞரணி தலைவர் எஸ்.ஏ.நேசன், அம்மா பேரவை இணை செயலாளர் லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட, தற்போது தற்காலிக முதல்-அமைச்சராக திறம்பட செயல்பட்டு வரும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு அளிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக, திருவள்ளூர் நகரம் முழுவதும் வீடுவீடாக சென்று பொதுமக்களிடம் ஆதரவு திரட்டுவது என முடிவு செய்யப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story