தலையில் கல்லை தூக்கிப்போட்டு பீகார் மாநில வாலிபர் கொலை ஊழியரிடம் போலீஸ் விசாரணை
செங்கல்பட்டு அருகே தலையில் கல்லை தூக்கிப்போட்டு பீகார் மாநில வாலிபர் கொலை செய்யப்பட்டார்.
தாம்பரம்,
கொலை
செங்கல்பட்டை அடு்த்த சாஸ்திரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் குப்பன். இவர் சொந்தமாக சிமெண்டு செங்கற்கள் செய்யும் தொழிற்சாலையை நடத்தி வருகிறார். அங்கு பீகார் மாநிலத்தை சேர்ந்த சஞ்ஜய் (வயது 27) மற்றும் ரோஜேஷ் (21) ஆகியோர் வேலை செய்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை அங்கு வேலைக்கு வந்தவர்கள் சஞ்ஜய் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
போலீசார் விசாரணை
அவரது தலையில் கல்லை தூக்கிப்போட்டு கொன்றுள்ளனர். இது குறித்து செங்கல்பட்டு தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் வழக்குப்பதிவு செய்து அவருடன் தங்கி இருந்த ரோஜேஷ் என்பவரை அழைத்து விசாரித்து வருகின்றார்.
மேலும் இந்த கொலைக்கான காரணம் என்ன? கொலையாளிகள் யார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Next Story