சாங்கிலி அரசு ஆஸ்பத்திரி அறுவை சிகிச்சை நிபுணர் பணி இடைநீக்கம்


சாங்கிலி அரசு ஆஸ்பத்திரி அறுவை சிகிச்சை நிபுணர் பணி இடைநீக்கம்
x
தினத்தந்தி 12 Feb 2017 4:49 AM IST (Updated: 12 Feb 2017 4:48 AM IST)
t-max-icont-min-icon

சாங்கிலி அரசு ஆஸ்பத்திரியில் சிவில் அறுவை சிகிச்சை நிபுணராக பணிபுரிந்து வருபவர், டாக்டர் அசோக்.

சாங்கிலி,

சாங்கிலி அரசு ஆஸ்பத்திரியில் சிவில் அறுவை சிகிச்சை நிபுணராக பணிபுரிந்து வருபவர், டாக்டர் அசோக். இவர் ரூ.3 லட்சத்து 70 ஆயிரத்துக்கான போலி போக்குவரத்து செலவு ரசீதுகளை சுகாதாரத்துறை அலுவலகத்தில் இரண்டு முறை தாக்கல் செய்து, அதற்கான நிதியை பெற்றார். இந்த மோசடி சம்பவம் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் மேற்கொண்ட விசாரணையில், குற்றச்சாட்டு உறுதியானது.

இது மட்டுமின்றி ஏற்கனவே ஹிங்கோலி மற்றும் பீட் மாவட்ட ஆஸ்பத்திரிகளில் பணிபுரிந்த காலகட்டத்தில் முறையான காரணம் இன்றி மருத்துவமனை ஊழியர் ஒருவரையும் டாக்டர் அசோக் தாக்கியதாக அவர் மீது வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இதனை மிகவும் தீவிரமாக கருதிய சுகாதாரத்துறை, அவரை பணி இடைநீக்கம் செய்து நேற்று உத்தரவிட்டது.


Next Story