மந்திரிகள் ராஜினாமா செய்யப்போவதாக கூறுவது சிவசேனா மக்களை ஏமாற்ற போடும் நாடகம்


மந்திரிகள் ராஜினாமா செய்யப்போவதாக கூறுவது சிவசேனா மக்களை ஏமாற்ற போடும் நாடகம்
x
தினத்தந்தி 12 Feb 2017 5:01 AM IST (Updated: 12 Feb 2017 5:01 AM IST)
t-max-icont-min-icon

மந்திரிகள் ராஜினாமா செய்யப்போவதாக கூறுவது சிவசேனா மக்களை ஏமாற்ற போடும் நாடகம் என நாராயண் ரானே கூறியுள்ளார். மந்திரிகள் ராஜினாமா மராட்டியத்தில் தற்போது பா.ஜனதா – சிவசேனா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்தநிலையில் மும்பை மாநகராட்

மும்பை,

மந்திரிகள் ராஜினாமா செய்யப்போவதாக கூறுவது சிவசேனா மக்களை ஏமாற்ற போடும் நாடகம் என காங்கிரஸ் மூத்த தலைவர் நாராயண் ரானே கூறியுள்ளார்.

மந்திரிகள் ராஜினாமா

மராட்டியத்தில் தற்போது பா.ஜனதா – சிவசேனா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்தநிலையில் மும்பை மாநகராட்சி தேர்தல் வார்டு ஒதுக்கிட்டில் ஏற்பட்ட பிரச்சினையால் கூட்டணி உடைந்தது. இதையடுத்து 2 கட்சிகளும் ஒருவரை ஒருவர் மாறிமாறி கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றன. இந்தநிலையில் வரும் 18–ந் தேதி சிவசேனா மந்திரிகள் தங்களது ராஜினாமா கடிதத்தை உத்தவ் தாக்கரேயிடம் கொடுத்து மாநில அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெறுவார்கள் என்ற தகவல் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ராராயண் ரானே கூறியதாவது:–

நாடகம்

உத்தவ் தாக்கரே சொன்னது போல செய்வாரா என்பது வரும் 18–ந் தேதி தெரியவரும். இது மக்களை ஏமாற்ற போடப்படும் நாடகம். சிவசேனா மந்திரிகள் தங்கள் பதவியை ராஜினாமா செய்யமாட்டார்கள். உண்மையில் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் பலர் தங்களுக்கும் மந்திரி பதவி கிடைக்கவில்லையே என வருத்தத்தில் உள்ளனர். சிவசேனா– பா.ஜனதாவினர் மக்களுக்கு என்ன செய்ய போகிறோம் என பிரசார மேடையில் பேசுவதில்லை. ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். அவர்கள் இரட்டை வேடம் போடுகின்றனர். தேர்தல் முடிந்த பின்னர் மீண்டும் சேர்ந்துகொள்வார்கள். மக்கள் நலனுக்காக இணைவதாக கூறுவார்கள். சிவசேனா, மாநில அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற்றால் பா.ஜனதாவிற்கு ஆதரவளிக்க தேசியவாத காங்கிரஸ் தயாராக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story