ரோஜா மலர்கிறது.. மனம் நிறைகிறது..
காதலர் தின கொண்டாட்டத்திற்கு உலகம் தயாராகிக்கொண்டிருக்கிறது. காதல் கொண்டாட்டத்தில் ரோஜா மலர்கள் முக்கிய பங் காற்றுகின்றன. அதனால் உலகம் முழுக்க இப்போது ரோஜா அலை வீசிக்கொண்டிருக்கிறது.

வெளிநாட்டு காதலர்கள் ஓசூர் ரோஜாவை காதல் பரிசாக பரிமாறிக்கொள்ள அதிகம் விரும்புகிறார்கள். அதனால் ஓசூரில் இருந்து ரோஜாக்கள் விமானம் மூலம் வெளிநாடுகளுக்கு பறந்துகொண்டிருக்கின்றன.
ஓசூரில் ரோஜா சாகுபடி செய்து, வெளிநாடுகளுக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறார், விவசாயி எழில்விழி. குடும்பத்தலைவியான அவர், காலையில் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு, காரை ஓட்டிக் கொண்டு கெலமங்கலம் அருகே உள்ள கவுதாளத்தில் உள்ள தனது விவசாய நிலத்திற்கு செல்கிறார்.
அங்கு மலர்சாகுபடி, தென்னை மரங்களுக்கு தண்ணீர் ஊற்றுதல், காய்கறிகளை பறித்தல், விவசாய நிலத்தை டிராக்டர் மூலம் உழுதல் என்று அனைத்து வேலைகளையும், சுறுசுறுப்புடன் செய்கிறார்.
காதலர் தினத்திற்காக ரோஜா பூக்களை அனுப்பும் மும்முரத்தில் இருந்த அவரிடம் பேசுவோம்:
“எனது சொந்த ஊர் காஞ்சீபுரம் மாவட்டம் நத்தகொல்லை கிராமம். விவசாயம்தான் எங்கள் தொழில். டிப்ளமோ படித்திருக்கும் நான், திருமணத்திற்கு பிறகு முழு நேர விவசாயியாக தீர்மானித்தேன். இதற்காக கெலமங்கலம் அருகே கவுதாளம், பச்சப்பனட்டி பகுதியில் நிலம் வாங்கி மலர்களை சாகுபடி செய்ய தொடங்கினோம்.
எனது கணவர் நாகராஜனுக்கும் விவசாயத்தில் நல்ல அனுபவம் உண்டு. திருமண விசேஷங்களுக்கு, பூங்கொத்து செய்ய பயன்படுத்தப்படும் ஜெர்பரா பூக்களை முதலில் பயிரிட்டோம். பின்பு ரோஜா சாகுபடியை தொடங்கினோம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சுற்று வட்டார பகுதி குளிர்ந்த சீதோஷண நிலையை கொண்டதாகும். இங்குள்ள மண் வளம் மற்றும் தட்பவெப்ப நிலை காரணமாக ரோஜா பூக்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. ஓசூர் பகுதியில் ரெட்ரோஸ், நொப்ளஸ், பஸ்ட்ரெட், ஒயிட்ரோஸ், தாஜ்மகால் உள்பட 40-க்கும் மேற்பட்ட ரக ரோஜாக்கள் பயிரிடப்பட்டு வருகின்றன.
வழக்கமாக இந்த மலர்கள் காதலர் தினத்தையொட்டி அதிக அளவில் வெளியூர்களுக்கு அனுப்பப்படுவது வழக்கம். வெளிநாடுகளுக்கும் ஓசூர் ரோஜாக்கள் அனுப்பப்படுகின்றன. சிங்கப்பூர், மலேசியா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, கனடா, வளைகுடா நாடுகளுக்கு அனுப்புகிறோம். ஒரு ரோஜாவுக்கு ரூ.20 வரை விலை கிடைக் கிறது.
மலர் சாகுபடியில் எனக்கு இருக்கும் ஆர்வத்தை கண்டு எனது கணவர் என்னை கென்யா, நைரோபி போன்ற வெளிநாடுகளுக்கு அழைத்து சென்றார். அங்கு புதிய தொழில் நுட்ப முறையில் மலர்களை சாகுபடி செய்கிறார்கள். அதாவது நிலத்தில் ‘சீட்’ போன்றுவைத்து அதன் மேலே தொட்டிகள் அமைத்து அதில் மலர்களை சாகுபடி செய்கிறார்கள். அந்த முறை வித்தியாசமாக இருந்தது.
விவசாயத்தில் ஈடுபாடு இருந்ததால் டிராக்டர் ஓட்டவும் கற்றுக்கொண்டேன். எங்கள் நிலத்தை நானே டிராக்டர் மூலம் உழுவேன்.
தற்போது மலர்களை திறந்த வெளியிலும், பசுமை குடில்கள் மூலமாகவும் சாகுபடி செய்து வருகிறேன். 2 ஏக்கரில் ஜெர்பரா பூக்களும், 3 ஏக்கரில் ரோஜாக்களும் பயிரிடப்பட்டுள்ளன. தற்போது காதலர் தினம் என்பதால் ரோஜா பூக்கள் பறித்து அதை பேக்கிங் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.
மலர் சாகுபடி என்பது லாபத்திற்காக மட்டும் செய்யக் கூடிய தொழில் அல்ல. அது மனதிற்கு நிறைவையும் தரக்கூடியது. நாம் வைத்த செடி, கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து பூக்களாக மலரும்போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. அதனால் நான் மலர்களை நேசித்து மகிழ்ச்சியாக வாழ்கிறேன்.
30 விவசாய தொழிலாளர்கள் எங்களிடம் வேலை பார்க்கிறார்கள். தண்ணீர் வைத்தல், உரம் போடுதல், ரோஜாக்களின் மொட்டுகள் விரியாமல் இருக்க அதில் காற்று புகும் உறைகள் அமைத்தல், செடிகளை பறித்து ரோஜாக்களை அளவாக எந்திரத்தில் கொடுத்து வெட்டி எடுத்தல், அந்த ரோஜாக்களை பேக்கிங் செய்து குளிர் சாதன அறையில் வைத்தல், பின்பு அவைகளை வெளி இடங்களுக்கு அனுப்பி வைத்தல் போன்று ஏராளமான பணிகள் உள்ளன.
மலர்சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கும் அரசாங்கம் உதவி செய்து வருகிறது. ரூ.1 கோடி முதலீட்டில் ரோஜாக்கள் பயிரிடுகிறோம் என்றால் அரசின் மானியமாக ரூ.50 லட்சம் வரையில் கிடைக்கிறது. ரோஜா சாகுபடியை பொறுத்தவரையில் பருவமழை பொய்த்து போனாலும் கவலை இல்லை. பனிக்காலத்தில் திறந்த வெளிகளில் பயிரிடப்படும் ரோஜாப்பூக்கள் மட்டும் உதிரவோ, கருகவோ செய்யும். பசுமை குடில்களில் ரோஜாக்களை நல்ல முறையில் பராமரித்து வந்தால் அதிக வருமானம் கிடைக்கும்.
ரோஜா மலர் சாகு படியை தவிர இயற்கை உரங்கள் தயாரித்து நானே விவசாய நிலங் களுக்கு பயன்படுத்து கிறேன். மேலும் எங்கள் தோட்டத்தில் தென்னை, அத்தி, கொய்யா, மா மரங்கள்உள்ளன. அதன் மூலமும் வருமானம் கிடைக்கிறது. திருமண விழாக்காலங் களில் மண்டபங்களின் முன்பு கட்டக்கூடிய அலங்கார கீற்றுகளையும் வளர்த்து வருகிறேன்” என்றார்.
எழில்விழி-நாகராஜன் தம்பதிகளின் மகள் செந்தமிழ் பிரியா விவசாயத்தில் பி.எஸ்சி. படித்து வருகிறார். மகன் செந்தமிழ் செல்வன் ‘டிசைனிங் கோர்ஸ்’ கற்கிறார். இவர்களும் ஓய்வு நாட்களில் பெற்றோருடன் சேர்ந்து விவசாய பணிகளை மேற்கொள்கிறார்கள்.
“விவசாயம், இறைவன் கொடுத்த வரம். இதில் கிடைக்கும் மகிழ்ச்சி வேறு எதிலும் கிடைக்காது. அதனால்தான் விவசாயத்தை விரும்பி செய்கிறேன்” என்கிறார், எழில்விழி.

Next Story