முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம்


முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம்
x
தினத்தந்தி 13 Feb 2017 3:15 AM IST (Updated: 13 Feb 2017 12:29 AM IST)
t-max-icont-min-icon

முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து கொழிஞ்சாம்பாறையில் பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம்

கொழிஞ்சாம்பாறை

பாலக்காடு மாவட்டம் சித்தூர் தாலுகாவில் கொழிஞ்சாம்பாறை, எருத்தேன்பதி, வடகரைப்பதி உள்பட ஏராளமான ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் வசிக்கும் பெரும்பாலான பொதுமக்கள் விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது பருவமழை பொய்த்ததன் காரணமாக பாலக்காடு மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அணைகள் வறண்டு விட்டன. இதனால் மாவட்டம் முழுவதும் கடும் வறட்சி நிலவுகிறது. மேலும் பல்வேறு பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்தநிலையில் சித்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட ஊராட்சிகளுக்கு கடந்த சில நாட்களாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என தெரிகிறது.

இதை கண்டித்து கொழிஞ்சாம்பாறை பஸ் நிலையம் அருகே பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த உண்ணாவிரத போராட்டத்தை கார்த்தி தொடங்கி வைத்தார். அருள்தந்தை ஆல்பர்ட் ஆனந்த ராஜ் முன்னிலை வகித்தார். இதில் தமிழ்ப்பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த மா.பேச்சிமுத்து, எஸ்.வெள்ளியங்கிரி, கிருஷ்ணரமணி, வில்லியம், மரியலூயிஸ், ஜோன் அமல்நாதன், அருண்பிரசாத், ராஜமாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ரிச்சார்டு வரவேற்று பேசினார்.


Next Story