புதுச்சேரியில் இருந்து உளுந்தூர்பேட்டைக்கு மதுபாட்டில்களை கடத்தி வந்த பெண்கள் கைது


புதுச்சேரியில் இருந்து உளுந்தூர்பேட்டைக்கு மதுபாட்டில்களை கடத்தி வந்த பெண்கள் கைது
x
தினத்தந்தி 13 Feb 2017 3:00 AM IST (Updated: 13 Feb 2017 12:31 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் இருந்து உளுந்தூர்பேட்டைக்கு 450 மதுபாட்டில்களை கடத்தி வந்த 3 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

போலீஸ் ரோந்து

உளுந்தூர்பேட்டை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது உளுந்தூர்பேட்டை பஸ் நிலையத்தில் பைகளுடன் நின்ற 3 பெண்களை போலீசார் சந்தேகத்தின்பேரில் பிடித்து, அவர்கள் வைத்திருந்த பைகளை சோதனை செய்தனர். சோதனையில் பைகளில் 450 மதுபாட்டில்களும், 15 லிட்டர் சாராயமும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

3 பெண்கள் கைது

தொடர்ந்து, பிடிபட்ட 3 பெண்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் எறையூரை சேர்ந்த சின்னப்பன் மனைவி ஜெசிந்தா(வயது 30), அந்தோணிராஜ் மனைவி பாத்திமா(34), சாலமன் மனைவி பிளோமினாள்(31) ஆகியோர் என்பதும், புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை பஸ்சில் கடத்தி வந்ததும் தெரிந்தது. இதையடுத்து, போலீசார், 3 பேரிடம் இருந்த தலா 150 மதுபாட்டில்கள், தலா 5 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.


Next Story