திண்டிவனத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 78 வழக்குகளுக்கு தீர்வு


திண்டிவனத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 78 வழக்குகளுக்கு தீர்வு
x
தினத்தந்தி 13 Feb 2017 12:36 AM IST (Updated: 13 Feb 2017 12:36 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 78 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

தேசிய மக்கள் நீதிமன்றம்

திண்டிவனம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சட்டப்பணிகள் குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதற்கு முதன்மை சார்பு நீதிபதி காயத்ரி தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார்.முகாமில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், குடும்ப நல வழக்குகள், குற்றவியல் வழக்குகள், வங்கி சாரா கடன் வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள் விசாரணை செய்யப்பட்டன.

இம்முகாமில் ஓய்வு பெற்ற நீதிபதி துளசி மோகன்தாஸ், மாவட்ட உரிமையியல் நீதிபதி புகழேந்தி, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி அருணாசலம் ஆகியோர் அடங்கிய குழுவினர் கலந்து கொண்டு வழக்குகளுக்கு சமரச அடிப்படையில் தீர்வு கண்டனர்.

78 வழக்குகளுக்கு தீர்வு

இதன் முடிவில் 78 வழக்குகள் சமரச அடிப்படையில் பேசி முடிக்கப்பட்டு ரூ.1 கோடியே 90 லட்சத்து 46 ஆயிரத்துக்கு தீர்வு காணப்பட்டது. இதில் சட்ட உதவி அலுவலர் நஸ்ரின், வழக்கறிஞர் சங்க தலைவர் சங்கரன், செயலாளர் பாலாஜி, அட்வகேட் அசோசியே‌ஷன் கிருபாகரன், வக்கீல்கள் அருணகிரி, சர்வர்கான், எம்பெருமான், சேது, சிவசுப்பிரமணியன், ராஜசேகரன், சண்முகசுந்தரம், வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story