லாட்டரி சீட்டுகள் விற்ற 3 பேர் கைது


லாட்டரி சீட்டுகள் விற்ற 3 பேர் கைது
x
தினத்தந்தி 13 Feb 2017 2:30 AM IST (Updated: 13 Feb 2017 1:00 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் லாட்டரி சீட்டுகள் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

போலி லாட்டரி

புதுவையில் லாட்டரி சீட்டுகளுக்கு அரசு தடை விதித்துள்ளது. இந்தநிலையில் கேரள லாட்டரி என்ற பெயரில் சிலர் போலியாக லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வருகின்றனர். அதாவது துண்டு சீட்டுகளில் நம்பர்களை எழுதி கொடுத்து லாட்டரி சீட்டு போல் விற்கின்றனர். அந்த லாட்டரி சீட்டுகளில் கடைசியில் உள்ள 3 நம்பர்களை குறித்து அவற்றில் சிலவற்றுக்கு சொற்ப தொகைகளை பரிசாக வழங்குகின்றனர். இத்தகைய போலி லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்பவர்களை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

3 பேர் கைது

இதன்படி ஒதியஞ்சாலை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையின்போது அண்ணாசாலையில் போலி லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த உருளையன்பேட்டையை சேர்ந்த ராஜாராம், ரெயில் நிலையம் அருகே லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட தவளக்குப்பம் தன்ராஜ், தேங்காய்த்திட்டு கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து ரூ.1000 ரொக்கப்பணம், 3 செல்போன்கள், லாட்டரி சீட்டு என எழுதி கொடுக்க பயன்படுத்தி 3 நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களுக்கு போலி லாட்டரி சீட்டுகளை சப்ளை செய்ததாக விழுப்புரத்தை சேர்ந்த சிவா, கோட்டக்குப்பம் பாபு என்ற பக்ருதீன், மேட்டுப்பாளையம் சதீஷ்குமார் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.


Next Story