குடும்ப தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை


குடும்ப தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 13 Feb 2017 3:00 AM IST (Updated: 13 Feb 2017 1:21 AM IST)
t-max-icont-min-icon

மீஞ்சூர் அருகே குடும்ப தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை

மீஞ்சூர்,

மீஞ்சூர் அருகே உள்ள மேலூர் ஜோசப் தெருவில் வசிப்பவர் ஸ்ரீதர் (வயது 35). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சைலஜா (31). இவர்களுக்கு சுனில், ரஞ்சன் ஆகிய குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில், ஸ்ரீதருக்கும், சைலஜாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சைலஜா வீட்டில் இருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மீஞ்சூரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

வரதட்சணை கேட்டதால்தான் சைலாஜா தற்கொலை செய்து கொண்டார், அவரது சாவில் மர்மம் உள்ளது என அவரது உறவினர்கள் மீஞ்சூர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story