மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் சாவு


மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் சாவு
x
தினத்தந்தி 13 Feb 2017 3:00 AM IST (Updated: 13 Feb 2017 1:21 AM IST)
t-max-icont-min-icon

சோளிங்கரில் நடைபெற்ற நண்பரின் திருமணத்திற்கு விஷ்ணு என்பவர் மோட்டார் சைக்கிளில் சோளிங்கர் சென்றார்.

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா ஆர்.கே.பேட்டையை அடுத்த சோளிங்கரில் நடைபெற்ற நண்பரின் திருமணத்திற்கு கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த விஷ்ணு (வயது 30) என்பவர் சென்னையில் இருந்து மோட்டார் சைக்கிளில் சோளிங்கர் சென்றார். அவருடன் அவரது நண்பர் ஸ்டூவர்ட் (20) என்பவரும் உடன் சென்றார். திருமண விழாவில் கலந்து கொண்டு நேற்று காலை விஷ்ணு சென்னைக்கு புறப்பட்டார். பள்ளிப்பட்டு தாலுகா வெள்ளாத்தூர் ஓடை அருகே சாலை வளைவில் வரும்போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கவிழ்ந்தது.

இந்த விபத்தில் விஷ்ணு படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவருடன் சென்ற ஸ்டூவர்ட் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இது குறித்து ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story