குற்றச்செயலில் ஈடுபட திட்டம் தீட்டிய 5 பேர் கைது


குற்றச்செயலில் ஈடுபட திட்டம் தீட்டிய 5 பேர் கைது
x
தினத்தந்தி 13 Feb 2017 3:15 AM IST (Updated: 13 Feb 2017 1:28 AM IST)
t-max-icont-min-icon

மீஞ்சூர் அருகே குற்றச்செயலில் ஈடுபட திட்டம் தீட்டிய 5 பேர் கைது

மீஞ்சூர்,

மீஞ்சூரை அடுத்த திருவெள்ளைவாயல் கிராமத்தில் காட்டூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் நாராயணமூர்த்தி நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் குற்ற செயலில் ஈடுபடுவதற்காக 5 பேர் கொண்ட கும்பல் திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓட முயன்றனர். அவர்களை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் நாலூர் கிராமத்தை சேர்ந்த அஜித்(வயது 25), ஜெகன் (24), திருவெள்ளைவாயல் கிராமத்தை சேர்ந்த நித்யானந்தம் (20), சிலம்பரன் (20), அசோக் (21) ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்கள் 5 பேரையும் கைது செய்த போலீசார் பொன்னேரி குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story