ரவுடிகள் தொல்லையை தடுக்கக்கோரி மீனவர்கள் சாலை மறியல்
ரவுடிகள் தொல்லையை தடுக்கக்கோரி புதுச்சேரியில் மீனவர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுவை மீனவ கிராமமான வைத்திக்குப்பத்தில் ரவுடிகள் சிலர் பொதுமக்களுக்கு தொந்தரவு கொடுப்பதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியும் அப்பகுதி மக்களில் ஒரு பிரிவினர் நேற்று மிஷன் வீதி–பட்டேல் சாலை சந்திப்பில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் கிடைத்தும் போலீஸ் சூப்பிரண்டு அப்துல் ரகீம், முத்தியால்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர், சப்–இன்ஸ்பெக்டர்கள் முத்துக்குமரன், வேலு மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
எம்.எல்.ஏ. பேச்சுவார்த்தைஆனால் மறியலில் ஈடுபட்டவர்கள் சமரசம் அடையவில்லை. போலீசாரும் ரவுடிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக கோஷங்களை எழுப்பினார்கள். மீனவர்களின் இந்த போராட்டத்தினால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் மாற்று வழியாக திருப்பி விடப்பட்டன.
இந்த போராட்டம் குறித்து தகவல் கிடைத்து அங்கு தொகுதி எம்.எல்.ஏ.வும், முதல்–அமைச்சரின் பாராளுமன்ற செயலாளருமான லட்சுமிநாராயணன் அங்கு விரைந்து வந்தார். மறியலில் ஈடுபட்ட மீனவர்களுடன் நிமிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
போலீசார் அலட்சியம்பொதுமக்களுக்கு தொந்தரவு கொடுப்பவர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று உறுதி அளித்தார். ஆனாலும் அவரது பதிலில் மீனவர்கள் திருப்தி அடையவில்லை.
தொடர்ந்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டை சந்தித்து போலீசாரின் அலட்சியம் தொடர்பாக புகார் தெரிவிக்கப்போவதாக மீனவர்கள் அங்கிருந்து கலைய தொடங்கினார்கள். அதைத்தொடர்ந்து வழக்கம்போல் போக்குவரத்து சீரானது.