ஜெ.தீபா பேரவைக்கு தீவிரமாக உறுப்பினர்களை சேர்ப்போம் நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு


ஜெ.தீபா பேரவைக்கு தீவிரமாக உறுப்பினர்களை சேர்ப்போம் நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு
x
தினத்தந்தி 13 Feb 2017 3:30 AM IST (Updated: 13 Feb 2017 1:49 AM IST)
t-max-icont-min-icon

ஜெ.தீபா பேரவைக்கு தீவிரமாக உறுப்பினர்களை சேர்ப்பது என்று நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

ஆலோசனை கூட்டம்

அகில இந்திய ஜெ.தீபா பேரவை ஆலோசனை கூட்டம் மாஸ் ஓட்டலில் நேற்று நடந்தது. கூட்டத்தில் சென்னை அகில இந்திய ஜெ.தீபா பேரவை ஒருங்கிணைப்பாளர் ஜெயபால் பன்னீர்செல்வம், தொழிற்சங்க பேரவை ஒருங்கிணைப்பாளர் மோகன்தாஸ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

மேலும் கூட்டத்தில் பேரவையின் புதுவை மாநில ஒருங்கிணைப்பாளராக பாஸ்கர் நியமிக்கப்பட்டார். மேலும் இணை ஒருங்கிணைப்பாளராக ஜிகினி என்ற முகமது அலி, அரசு ஊழியர்களின் ஒருங்கிணைப்பாளராக வடிவேலு ராஜன், அவைத்தலைவராக அசோகா சுப்ரமணியன், பொருளாளராக தேவநாதன், துணை ஒருங்கிணைப்பாளர்களாக ஜெகதீஷ், ஏழுமலை, மதி என்ற பொன்னியம்மாள், செய்தி தொடர்பாளராக பாலச்சந்திரன், செயற்குழு உறுப்பினர்களாக புஷ்பராஜ், பன்னீர்செல்வம், ஆறுமுகம் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். மேலும் 19 தொகுதிகளுக்கும் ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

தீவிர உறுப்பினர் சேர்க்கை

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–

*வருகிற 24–ந்தேதி ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஊனமுற்றோர், மனவளர்ச்சி குன்றியோர் இல்லம், அனாதை குழந்தைகள் இல்லங்களில் உணவளிப்பது, ரத்ததானம் செய்வது.

*மாநில முழுவதும் ஜெ.தீபா பேரவைக்கு தீவிரமாக உறுப்பினர்களை சேர்ப்பது.

*போயஸ் கார்டன் இல்லத்தை சம்பந்தமே இல்லாதவர்களிடம் இருந்து மீட்டு நினைவு இல்லமாக மாற்றுவது.

*ஜெ.தீபாவின் சுற்றுப்பயணத்தில் புதுவை நிர்வாகிகள் பங்கேற்பது.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story